Kombu Seevi: சண்முக பாண்டியன்- சரத் காம்போ செம! விஜயகாந்த் மகன்னு நிரூபிச்சிட்டாரு! கொம்பு சீவிக்கு எகிரும் பாராட்டு
சென்னை: இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான கொம்பு சீவி திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் சரத் குமார் காம்போ செமையாக இருக்கிறது என்று இந்த படத்தை பார்த்துவிட்டு அதிமான பாசிடிவ் பாராட்டு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இன்று வெளியான கொம்பு சீவி படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்களின் கருத்துக்களை பார்க்கலாம்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இந்த வருடத்தில் இரண்டாவது திரைப்படம் வெளியாகி இருக்கிறது. முதல் திரைப்படமான படைத்தலைவன் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டாலும் அது சில இடங்களில் கதைக்கு தேவையான வேகம் இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது பொன்ராம் இயக்கத்தில் உருவான கொம்பு சீவி படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு இருந்தது. நடிகர் விஜயகாந்த், சரத்குமாரின் வாழ்க்கையில் பெரிய அளவில் ஒரு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படத்தில் சரத்குமாருக்காக விஜயகாந்த் செய்த உதவிக்காக இப்போது சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து சரத்குமாரும் கொம்பு சீவி படத்தில் நடித்திருக்கிறார்.
கொம்பு சீவி படத்தின் பிரமோஷனில் படக்குழுவினர்கள் இந்த படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை கூறி வந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று டிசம்பர் 19ஆம் தேதி கொம்பு சீவி படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி இருக்கிறார்கள்.
அதிலும் ஒரு ரசிகை பேசும் போது, சண்முக பாண்டியன் அவருடைய அப்பா விஜயகாந்த்தை அதிகமாக பிரதிபலிக்கிறார். கண் புருவத்தை அப்பாவை போலவே சில இடங்களில் தூக்குகிறார். அதே போல ஃபைட் சீனிலும் அப்பாவை நினைவுபடுத்துகிறார் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.
இன்னும் ஒரு ரசிகர் பேசும் போது ட்ரெய்லரில் இது ஒரு கிராமத்து கதை போல காட்டினார்கள். ஆனால் படத்தை பார்க்கும் போது தான் இது இயக்குனர் பொன்ராமின் இன்னொரு சிறந்த ஒரு படம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ஆக்சன் வேண்டுமா? ஆக்சன் இருக்கிறது. காதல் வேண்டுமா? காதல் இருக்கிறது... காமெடி வேண்டுமா? காமெடி இருக்கிறது.. என்று ஏகபோகத்துக்கும் பாராட்டி இருக்கிறார்.
இன்னொரு ரசிகை சொல்லும்போது, இது கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் என்று சொல்லி இருக்கிறார். கொம்பு சீவி படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இருப்பது என்று கூறப்படுகிறது. முதல் பாதி வேகமாக சண்டை காட்சிகள் மற்றும் திரில் காட்சிகளை சேர்ந்த கலவையுடன் நகர்கிறது.
இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் வந்த திருப்பம் ரசிக்க வைக்கிறது என்றும் சிலர் பாராட்டி கொண்டிருக்கின்றனர். இன்னொரு ரசிகர் சொல்லும்போது இந்த படம் கேப்டன் பிரபாகரன் போல பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் சண்முக பாண்டியனுக்கு வாழ்த்துகளையும் சொல்லி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications