ராஜூக்காக செந்தில் செய்த செயல்... ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா??
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ராஜுவுக்கு அவருடன் சீரியலில் ஒன்றாக நடித்த மிர்ச்சி செந்தில் செய்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் செந்தில் ரசிகர்களிடம் சமூகவலைத்தளத்தில் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதாநாயகனாக மாயன் மற்றும் மாறன் எனும் இரட்டை கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் செந்தில் அவருடன் அந்த சீரியலில் நண்பனாகவும், மாப்பிள்ளை ஆகவும் நடித்த ராஜூக்காக ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த ஒரு போட்டியாளராக இருக்கும் ராஜூ வெற்றி பெற்று மீண்டும் சீரியலில் வரவேண்டும் என்பதுதான் தங்களின் ஆசையும் என்று பலர் கூறி வருகின்றனர்.

சரவணன் மீனாட்சியில் அறிமுகம்
ஆர் ஜே வாகவும், விஜே வாகவும் இருக்கும் மிர்ச்சி செந்தில், சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளித்திரை கதாநாயகனாக மாறிவிட்டார். இவர் சீரியலில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலமாக ரசிகர்களின் மனதை அதிகமாகவே கவர்ந்து விட்டார். முதல் சீரியலில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு காரணமாக இவருக்கு தொடர்ந்து சினிமாக்களிலும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் சீரியலில் கிடைத்த வெற்றி சினிமாக்களில் கிடைக்கவில்லை என்று மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கி இருக்கிறார்.

நான்கு வருடம் போராடி கிடைத்த வாய்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம்இருவர்நமக்குஇருவர் சீரியலில மூலமாக மீண்டும் இவருடைய பயணத்தை தொடங்கியவர், தற்போது இரண்டாவது சீசனிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த இரண்டாவது சீசனில் இவருடன் கத்தி கேரக்டரில் நடிக்கும் ராஜு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த நான்கு சீசன்களிலும் இவர் போராடி கொண்டிருந்தாலும், தற்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் ராஜூ கலந்துகொண்டுள்ளார்.

மாறாத மாயன், கத்தி நட்பு
ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் அவர் வரும் வரைக்கும் அவருடைய கேரக்டரில் எந்த ஒரு நடிகரையும் நடிக்க வைக்காமல் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது அதில் ராஜுவுக்கு ஓட்டு போட சொல்லி செந்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார். செந்திலின் போஸ்டுக்கு லைக்கள் மட்டுமல்லாமல் கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்
அதில் பல ரசிகர்கள் நாங்கள் ராஜூவுக்கு ஓட்டு போட்டாச்சு...என்றும், இந்த சீசனின் வெற்றியாளர் ராஜூ தான் என்றும், மீண்டும் அவர் கத்தியாக வரவேண்டும் என்றும் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் வாழ்க்கை அதிக அளவில் முன்னேற்றம் அடைய வேண்டும் என வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர். தன்னுடைய சக நடிகராகவும், நண்பராக இருக்கும் ராஜூக்காக செந்தில் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications