கடைசி நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் விஜயகாந்தின் திரைப்பட கதை.. கவனிச்சிங்களா?வேற வழி இல்லையாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படத்தை காப்பி அடித்ததாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அடிக்கடி பாரதி கண்ணம்மா சீரியல் பல திரைப்படங்களை காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.
கண்ணம்மாவின் மனதை மாற்றுவதற்காக பாரதி விஜயகாந்த் ஆக மாறி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

முடிவு எப்போது
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் இருந்து நெட்டிசன்களுக்கு அதிகமாக பிடித்த ஒரு சீரியல் ஆக இருந்து வருகிறது. என்ன தான் இந்த சீரியல் அதிகமாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு கொண்டிருந்தாலும் இந்த சீரியலின் டிஆர்பி குறைந்தபாடில்லை. அதுவும் தற்போது ஒரு சில மாதங்களாகவே இந்த சீரியலில் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது என்ற தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இறுதிக்கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலே இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் டிஆர்பி எதிரி கொண்டு தான் இருக்கிறது.

பீஸ்ட் படத்தின் காப்பி
இப்ப வரைக்கும் விஜய் டிவியில் டிஆர்பி யில் முதலிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் அடிக்கடி வெற்றி பெற்ற திரைப்படங்களை காப்பி அடிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் கதையை காப்பி அடித்து தீவிரவாதிகள் பாரதியின் மருத்துவமனையை கைப்பற்றிவது போல ஒரு மாதத்திற்கு மேலே கதை இழுத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கூட பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் இருந்தாலும் கண்ணமா தான் பாரதியை காப்பாற்றி இருந்தார். இதனால் இந்த சீரியலில் தீவிரவாதிகள் அளிக்கப்பட்டதும் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் ஆனால் அப்போதும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

முடிவுக்கு வந்த டிஎன்ஏ பிரச்சனை
அதைத்தொடர்ந்து பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்கு முடிவு செய்ததும் டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவாக வந்ததும் பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் டெஸ்ட் ரிசல்ட் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பல மாதங்கள் கழித்து வந்தது. லட்சுமியும் ஹேமாவும் பாரதியின் குழந்தைகள் என்று பாரதிக்கு தெரிய வந்த பிறகு கண்ணம்மா இனி நான் உன்னோடு சேர்ந்து வாழ மாட்டேன் என்று மீண்டும் பேக்கை கையில் தூக்கியப்படி வீட்டை விட்டு கிளம்பி விட்டார். இதனால் இந்த சீரியல் எப்போது தான் முடிவடையும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்போ சின்ன கவுண்டர்
இந்த நிலையில் கண்ணம்மா பேக்கை தூக்கி கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பியதும், பாரதி இந்தா! நானும் வாரேன் என்று பின்னாடியே கிளம்பி வந்து விட்டார். கண்ணம்மாவின் மனசை மாற்றுவதற்காக பாரதி உண்ணாவிரதம் இருந்து அந்த ஊருக்கு மருத்துவமனையும் கொண்டு வந்துவிட்டார். ஆனாலும் கண்ணம்மா மனசு மாறியது போல இல்லை. ஆரம்பத்தில் பாரதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்த ஊர்க்காரர்கள் பாரதியால் மருத்துவமனை வந்ததும் பாரதியை மன்னித்து ஏற்றுக் கொண்டு கண்ணம்மாவின் கையாலே சாப்பாடு சமைத்துக் கொடுக்க சொல்லி இருக்கின்றனர். கண்ணம்மாவின் வீட்டில் சாப்பிட்ட பாரதி சாப்பாட்டு இலைக்கு கீழே தாலிக்கயிற்றை வைத்து விட்டு சென்றிருக்கிறார். தாலி கயிற்றின் எடுத்து பார்த்த கண்ணம்மாவை பார்த்து இது என்ன புதுசா "சின்ன கவுண்டர்" படத்தில் இருந்து சுட்ட கதையா? இப்போது உள்ள திரைப்படத்தை சுட்டால் தான் தெரியும் என்று முப்பது வருஷத்துக்கு பின்னாடி போய் விட்டார்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications