இதற்கெல்லாம் விவாகரத்தா..!! புலம்பிய ரவீந்தருக்கு அறிவுரை கொடுக்கும் ரசிகர்கள்
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் லைவில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
காதல் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் தன்னுடைய மனைவியை பற்றி சமூக வலைதளத்தில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியான சின்னத்திரை நடிகை மகாலட்சுமி நடிக்கும் சீரியலை நான்கு நாட்கள் தொடர்ந்து பார்த்தால் டைவர்ஸ் பண்ணி விடுவேன் என்பது போல என்று கூறி இருப்பதாராம் அது தான் இப்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங்கில் ரவீந்தர்
தயாரிப்பாளர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ கொடுத்துக் கொண்டிருந்த ரவீந்தர் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களை தயாரித்திருந்தாலும் அப்போதெல்லாம் கிடைக்காத பெயரையும்,புகழையும் தற்போது அவருடைய திருமணம் இவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. பட்டி தொட்டி எல்லாம் சமூக வலைத்தளங்களில் இவருடைய முகங்கள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு தன்னுடைய திருமணத்தால் ரவீந்தர் பிரபலம் அடைந்து விட்டார் என்று சொன்னால் மிகையாகாது.

நெகட்டிவ் கருத்துக்கு கவலை இல்லை
தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமியை காதலித்த திருமணம் செய்து கொண்டது 90களில் மனதை அதிகமாக பாதித்துவிட்டது போல. அதனால் தான் அவர்கள் அதிகமாக ரவீந்தரை கலாய்த்து சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். என்னதான் நெட்டிசன்கள் ரவீந்தரை கலாய்த்து கொண்டிருந்தாலும் பல ரசிகர்கள் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டிருக்கிறார்கள். ரவீந்தருக்கு வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
எளிமையான முறையில் திருப்பதியில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், எல்லோரைப் போல தான் இவர்களும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். இவர்கள் புகைப்படத்தை வெளியிடும்போது இந்த அளவிற்கு பிரபலமாகும் என்று அவர்களே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இருவருடைய ஜோடி பொருத்தத்தை பார்த்ததும் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது போல. அதனால் தங்களால் எந்த அளவிற்கு கலாய்க்க முடியுமோ அந்த அளவிற்கு இந்த ஜோடியை கலாய்த்து வருகிறார்கள்.

நெட்டிசனுக்கு கிடைத்த கண்டன்ட்
எப்போதுமே நெகட்டிவ் கமெண்ட்களுக்கு கவலைப்படாத ரவீந்தர் இப்போதும் இந்த பிரச்சனையை கண்டு கொள்வதே இல்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து தன்னுடைய ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு வந்த நெகடிவ் கமெண்ட்களை எல்லாம் தான் கண்டு கொள்வதில்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது ஒரு ரசிகர் ரவீந்தரிடம் நீங்கள் உங்கள் மனைவி நடித்த சீரியலை பார்த்து இருக்கிறீர்களா?? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரவீந்தர் நான் திருமணத்திற்கு முன்பு பார்த்தது இல்லை. பார்த்திருந்தால் திருமணம் செய்திருக்க மாட்டேன் என்று தனக்கே உரிய நக்கலோடு கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு நான்கு நாட்கள் இந்த சீரியலை பார்த்து வருவதாக கூறி இருக்கிறார். தொடர்ந்து பார்த்து வந்தால் விவாகரத்து செய்து விடுவேன் போல என்று சொல்ல வந்தவர் பாதியிலே இந்த வார்த்தைகளை மூடிவிட்டு இதை வைத்தும் மீம்ஸ் கண்டண்ட் செய்து விடுவார்கள் என்று நெட்டிசன்களுக்காக பயந்தது போல நடித்து இருந்தார். இதை வைத்து நெட்டிசன்கள் கண்டன்ட் கிரியேட் பண்ணி தற்போது ரவீந்தருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications