இதை எதற்கு போஸ்ட் போட்டாங்க மகாலட்சுமி... அந்த போட்டோக்கு இப்படி ஒரு பாடலா!! வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி தற்போது தன் கணவரோடு கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கணவர் ரவீந்தர் மீது மகாலட்சுமி வைத்திருக்கும் அன்பை இப்படியா? ?புகைப்படத்தில் வெளியிட வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி அன்பாக இருந்தால் அது தப்பில்லை என்று மகாலட்சுமியின் ரசிகர்கள் நெட்டிசங்களிடம் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

பீல் பண்ண வைத்த காதல் திருமணம்
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் இரண்டாவது திருமணம் என்பதாலோ என்னவோ தற்போது சமூக வலைத்தளத்தில் இவர்கள் திருமணம் பற்றிய செய்திகள் தான் அதிகமாக இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் தயாரிப்பாளரான ரவீந்தர் ஒரு 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளரான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் என்பது பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வருகிறது என்று ரசிகர்களின் கமெண்டுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. நெட்டிசன்கள் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமணத்தை பார்த்து தங்களால் முடிந்த அளவிற்கு மீம்ஸ்களில் தங்களுடைய கோபத்தை காட்டி வருகிறார்கள்.

ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை
சமூக வலைத்தளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் அதில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமண புகைப்படங்களும் மீம்ஸ்களும்தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது போதாது என்று மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் ஜோடியாக கொடுத்த சில பேட்டிகளும் ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதல் கணவரின் தோளில் சாய்ந்த படி நெருக்கமாக இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாராம். இதை பார்த்ததும் வழக்கம் போல நெட்டிசங்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்ட மேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.

கடுப்பான சிங்கிள்ஸ்
மகாலட்சுமி ஒருபுறம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் ரவீந்தரும் நானும் சளைத்தவர் அல்ல என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் மகாலட்சுமியோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் மகாலட்சுமியை தன்னுடைய இடுப்பில் தூக்கி வைத்த படி இருக்கும் போட்டோக்களும் இடம் பிடித்திருக்கிறது. இந்த மாதிரி இவர்கள் போஸ்ட் வெளியிட்டதும் சிங்கிள்ஸ் பலர் கடுப்பாகி கமெண்டுகளில் சாபம் விட்டு வருகிறார்களாம்.

பாடல்கள் வேற லெவல் தான்
மகாலட்சுமி முகத்தோடு முகம் வைத்து ரவீந்தருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்திற்கு "நறுமுகையே.. நறுமுகையே" எனும் பாடலை வைத்துள்ளார். அதற்கு அடுத்ததாக மகாலட்சுமியை இடுப்பில் தூக்கி வைத்த படி எடுத்த புகைப்படத்திற்கு, "முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ" என்று பாடலை வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் காரில் எங்கேயோ வெளியே சென்று இருப்பார்கள் போல, அப்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு "விழியே விழியே" என்னும் பாடலை இணைத்து இருக்கிறார்கள் இதை பார்த்ததும் பலர் கமெண்ட்களில் தங்களுடைய இயலாமையை காட்டி வருகிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் இதே போல எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications