ப்ரோமோ போடறதுக்குகூட ஒரு கன்டெண்ட்டும் கிடைக்காத நிலையில் பிக்பாஸ்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரோமோ போடுவதற்கு கூட கண்டென்ட் இல்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் ஆகிய பின்னரும் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு நிகழ்ச்சி பேசப்படவில்லை.
நிகழ்ச்சியில் எந்த சுவாரசியமும் இல்லாத நிலையில் அனைவரும் நடிப்பது போலவே உள்ளது நிகழ்ச்சி. போதாகுறைக்கு ஆபாச செய்கைகளும் பேச்சுகளும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதனை கலாய்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
|
ஆளுக்கு ஆள்
எந்த Episode பார்த்தாலும் நீங்க நீங்களா இருங்க நீங்க நீங்களா இருங்கள் என்று ஆளுக்கு ஆள் மாறி மாறி..
|
இதை பாருங்க மக்களே
மேட்ச் ஃபவுன்டு... நல்லா பண்றீங்கய்யா...
|
தரித்திரமான நிலை
ப்ரோமோ போடறதுக்குகூட ஒரு கன்டெண்ட்டும் கிடைக்காத ஒரு தரித்திரமான நிலையில இருக்கு பிக்பாஸ்-2
|
அரசியல் சாணக்கியர்கள்
அரசியல் சாணக்கியர்களை கண்டிருக்கோம் ஐயா, ஆனால் தங்களைப்போன்று கள நிலவரங்களை ஆராய்ந்து வாக்களிப்பதில் சிறப்புத்தேர்ச்சிப்பெற்ற #பிக்பாஸ் சாணக்கியர்களை கண்டிலோம் ஐயா.
வாக்களிப்பதிலுள்ள நுணுக்கங்களை மக்களுக்கு இனிவரும் காலத்திலும் பகிருங்கள். சிறப்பு; வாழ்த்துக்கள்.
|
பாதி கூட வராது போல
பிக்பாஸ் 2 ல வாங்குன,வாங்கப்போற ஓட்டு அத்தனையும் கூட்டினாலும் ஓவியா ஒருமுறை வாங்குன ஓட்டுல பாதிகூட வராது போல
|
ட்ரை பண்ணுங்க பிக்பாஸ்
இந்த மாதிாி ப்ரோமோ போட்டு அப்பவாது இந்த பிக்பாஸ் பாா்க்குற கூட்டம் வ௫தான்னு பாா்க்குறாங்க இது கஷ்டம் தான் இன்னும் நிறைய ட்ரை பண்ணுங்க பிக்பாஸ்...
எல்லா ஊரிலும் பல பாகம் வந்துருச்சு இங்க என்னடான்னா 2 க்கே முக்குறாரு நம்ம பிக்பாஸ்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!