தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் புது படம்... அடுத்த புதுப்பேட்டை ஆக இருக்குமா??
சென்னை: தனுஷின் அடுத்த படம் பற்றிய செய்தியும்.. கதைக்களம் பற்றிய கருத்தும் சமூக வலைதளங்களில் ஹாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு நடிப்பதற்கு தேவையான அளவு தனது கால்ஷுட் டைரியை ஃபுல் பண்ணியிருக்கும் தனுஷ், இந்தப்படத்தில் எப்போது நடிக்க ஆரம்பிப்பார் என்று ரசிகர்கள் இப்பொழுதே ஆர்வமாக எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
ஏனென்றால் இந்தப் படம் கதைக்களமும்..இயக்குனரும் அப்படி..!!

சரியான உதாரணம்
'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' இந்த பழமொழிக்கு சரியான உதாரணம் தனுஷ். நடிப்பு என்று வந்துவிட்டால் நடிப்பதே தெரியாமல் நடிப்பது தனுஷிற்கு தற்பொழுது கை வந்த கலையாகி விட்டது.சும்மாவா இரண்டு தேசிய விருது பெற்று இருப்பார்..!? மாஸ்,கிளாஸ், காமெடி என்று மாற்றி மாற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ்குள் ஒரு நல்ல இயக்குனர் இருப்பதால் இயக்குனரையும் கதையையும் தேர்வு செய்வதில் தற்பொழுது கவனமாக இருந்து வருகிறார். ஹாலிவுட், ஹிந்தி என்று தன் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு சென்றாலும் தமிழ் சினிமாவிலே பெரும்பாலும் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தி வருகிறார்.

வரிசையாக படங்கள்
தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தரங்கிரே டிசம்பர் 24ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதைத் தவிர்த்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்', செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2', மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' என்று வரிசையாக படங்கள் ஷூட்டிங்கில் இருந்து வருகிறது. அதற்குள் இவ்வளவு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும் தன் அடுத்த படத்திற்கான இயக்குனரை தனுஷ் கமிட் செய்துவிட்டதாக
கூறப்படுகிறது.

அடுத்த படத்தின் இயக்குனர்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வசந்த் ரவி,பாரதிராஜா நடிப்பில் டிசம்பர் 23ஆம் தேதி வெளிவர இருக்கும் 'ராக்கி'படத்தை இயக்கியிருப்பவர் அருண் மாதேஸ்வரன் .இவரது ராக்கி படத்தின் டிரைலர் வெளிவந்து யூடியூப் பில் பலமில்லியன் பார்வைகளை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே அருண் மாதேஸ்வரன் கேங்ஸ்டர், பழிவாங்குதல் போன்ற ரத்தமும் சதையுமான ராவான கதைகளை மிரட்டலாக எடுக்க கூடியவர் என்று தெரிகிறது.

கேங்ஸ்டர் படமாக இருக்குமா
தற்பொழுது தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக தனுஷ் இவரை தேர்ந்தெடுத்திருப்பது தான் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டி உள்ளது.
தனுஷ் -அருண் மாதேஸ்வரன் இணையும் படம் கண்டிப்பாக கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும். அவ்வாறு கேங்ஸ்டர் படமாக இருக்கும் பட்சத்தில் தனுஷிற்கு இது மற்றொரு புதுப்பேட்டை யாக இருக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications