ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களின் இறையாண்மையை பறிக்காது: ராஜ்யசபாவில் அருண் ஜேட்லி உறுதி
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகம் செய்து, அதை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பின் 122வது பிரிவை திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான முன் மொழிவையும் ஜேட்லி முன்வைத்தார்.

மசோதாவை அறிமுகம் செய்து ஜேட்லி பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு மாநிலங்களின் இறையாண்மையை பறிப்பதாகாது. மாநிலங்கள் ஆலோசனையை ஏற்று, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மசோதாவை அமல் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜிஎஸ்டி சட்டம் நிறைவேறினால் வரி ஏய்ப்பு இயலாதது ஆகிவிடும். புதிய வரி விதிப்பு முறையால் மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் வருவாய் அதிகரிக்கும். வரி மீது வரி விதிக்கும் நடைமுறை போய்விடும்.
சீரான பொருளாதார மார்க்கெட்டாக இந்தியாவை மாற்றம் செய்ய இந்த மசோதா உதவும். ஜிஎஸ்டி கவுன்சிலில் 3ல் 2 பங்கு வாக்கு மாநில அரசுகளிடம்தான் இருக்கும். மூன்றில் ஒரு பங்கு வாக்குரிமை மட்டுமே மத்திய அரசிடம் இருக்கும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.
இதன்பிறகு விவாதம் நடைபெற்றது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications