புளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகனை தாக்கிய செல்வத்துக்கு ஜாமீன்
எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய நபருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது
Recommended Video
நாகர்கோவில்: மாவு புளிச்சு போச்சு.. நல்லா இல்லை.. என்று எழுத்தாளர் ஜெயமோகன் தூக்கி எறிந்த சம்பவம்.. போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி வரை சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் கடைக்காரர் செல்வத்துக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.
கடந்த 14 - ந்தேதி மாவு வாங்க போன எழுத்தாளர் ஜெயமோகன், அது புளிச்ச வாடைவந்ததால், கடைக்கார பெண்ணிடமே திருப்பி தந்ததாகவும், அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சமயத்தில் அங்கு வந்த கடைக்கார பெண்ணின் கணவன் செல்வம், ஜெயமோகனை தாக்கியதுடன், அவரது வீடு வரைக்கும் விஷயத்தை கொண்டு போய்விட்டார் என்றும் சொல்லப்பட்டது.

இதன்பிறகு, செல்வம் தரப்பில் ஜெயமோகன்தான் தாக்கினார் என்றும், செல்வம்தான் தாக்கினார் என்று ஜெயமோகன் தரப்பிலும் சொல்லப்பட்டது. மேலும் விவகாரம் பெரிதாக காரணம், கடைக்காரர் செல்வம் திமுக பிரமுகர் என்ற தகவலும் கசிந்தது. இதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார் ஜெயமோகன்.
இதையடுத்து, ஏஎஸ்பி. ஜவஹர் உத்தரவின்படி செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி நாகர்கோவில் கோர்ட்டில் செல்வம் மனு செய்திருந்தார். அதை நேற்று விசாரித்த கோர்ட் செல்வத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனிடையே, ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கடைக்காரப் பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுவதுடன், வியாபாரிகள் சங்கத்தினரும் இதில் தலையிட்டு வருகின்றனர். எனவே, ஜெயமோகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி கடைக்கார குடும்பத்தினரும், வியாபாரி சங்கங்களும் கோர்ட்டை நாட இருப்பதாக தெரிகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications