ஹிமாச்சல பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு: வாகனங்கள் மண்ணில் புதைந்தன - பலர் மாயம்
ஹிமாச்சலபிரதேசத்தில் கின்னாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வாகனங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இடிபாடுகளில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர்.
சிம்லா: தென்மேற்குப் பருவமழையால் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. கின்னார் பகுதியிலுள்ள ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர் 50க்கும் மேற்பட்டோர் மண் சரிவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது.
தென்மேற்கு பருவமழை நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா கோவா, அசாம், அருணாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாகவே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பலரது உயிரை காவு வாங்கி வருகிறது. எந்த நேரத்தில் எங்கு நிலச்சரிவு ஏற்படுமோ என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளது.
அங்குள்ள கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 26ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக சங்லா பள்ளத்தாக்கில் உள்ள பட்சேரி பாலம் இடிந்து விழுந்தது. அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த சோகம் மறைவதற்குள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பத்வாஸ்க்கு அருகே மலையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. அதிபயங்கர சப்தத்தோடு மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அந்த நிலச்சரிவில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கின்னார் மாவட்டத்தில் இன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் புதைந்திருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 40 பயணிகளுடன் சென்ற ஹிமாச்சல் சாலை போக்குவரத்துக் கழகம் பேருந்து உட்படப் பல வாகனங்கள் தற்போது இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகத் துணை ஆணையர் ஆபித் ஹுசைன் சாதிக் தெரிவித்துள்ளார்.
அங்கே விரைந்த இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) மீட்புப்பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்தார்.

சிம்லா செல்லும் ஒரு பேருந்தில் 40 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் புதைந்திருக்கலாம் அல்லது இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் டிரைவர் உட்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் சிக்கிய அனைவரையும் மீட்ட பிறகே சரியான தகவல்களை அளிக்க முடியும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications