Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் கடுமையாக உயர்ந்த கொரோனா மரணங்கள்.. ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 10 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 19 பேரில் 18 பேர் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். ஓருவர் மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த 326 பேரில் 260 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 18 பேர், திருவள்ளூரில் 15 பேர், காஞ்சிபுரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 298 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை எப்படி

பலி எண்ணிக்கை எப்படி

தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தமே இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னை செங்கல்பட்டை தவிர வேறு மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஒற்றை இலக்கத்தில் தான் உயிரிழப்புகள் இதுவரை ஏற்பட்டுள்ளது. வேலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 326 பேரில் பெரும்பாலோனர் 50 வயதை கடந்தவர்கள் ஆவர். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இறப்பு விகிதமும் கணிசமாக உள்ளது. 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களும் தினமும் இறப்பது அதிகரித்துள்ளது. எந்த விதமான பாதிப்பும் இல்லாதவர்களும் கொரோனாவால் இறப்பது அதிகரித்துள்ளது.

சென்னையில் 18 பேர் பலி

சென்னையில் 18 பேர் பலி

ஜுன் 10 ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 19 பேர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 19 பேரில் 16 சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். 3 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இளம் வயதில் மரணம்

இளம் வயதில் மரணம்

தமிழகத்தில் அண்மையில் 20 வயது கர்ப்பிணி பலியான நிலையில் அடுத்த நாள் 22 வயது இளம் வயது நபர் பலியாகி இருந்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், 30 வயது நபர் எந்த உடல் பாதிப்பும் இல்லாமல், தீவிர கொரோனாவால் சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இன்று 38 வயது நபர் எந்த பாதிப்பும் இன்றி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் சென்னையில் இன்று கொரோனாவால் உயிரிழந்தார்

முதியவர்கள் பலி

முதியவர்கள் பலி

நேற்று வரை 307 பேர் உயிரிழந்திருந்த நிலையில் 308வது நபராக 72 வயது முதியவர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலுடன் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9ம் தேதி காலை 3.40 மணிக்கு கொரோனாவால் மூச்சுத்திணறல் அதிகமாகி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அடுத்ததாக 80வயது முதியவர், 70வயது முதியவர், 60வயது முதியவர், 58 வயது பெண், 61 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தனர்.

சென்னையில் அதிக மரணம்

சென்னையில் அதிக மரணம்

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 51 வயது ஆண், 65 வயது ஆண், 65 வயது ஆண், 68 வயது பெண், 38 வயது ஆண், 68 வயது பெண், 78 வயது பெண், 57 வயது ஆண், 70 வயது ஆண், 62 வயது பெண்,78 வயது ஆண் ஆகியோர் சென்னையில் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். 57 வயது ஆண் மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனாவால் கடந்த ஜூன் 1ம் தேதி 184 ஆக இருந்த கொரோனா மரணம் அடுத்த 10 ஆவது நாளில் 326 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+