"கிழிந்து தொங்குது" நம்பகத்தன்மை.. அப்படின்னா சட்டத்தை திருத்துங்க நிதியமைச்சரே.. சு.வெங்கடேசன் நறுக்
மதுரை எம்பி சு வெங்கடேசன் நிதியமைச்சருக்கு முக்கிய கோரிக்கையை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு, மதுரை எம்பி வெங்கடேசன், நிதியமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதானி குழுமத்தின் மோசடிகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.. அந்த அறிக்கை வந்ததில் இருந்தே டெல்லி தகித்து காணப்பட்டது. பெரும் பரபரப்பை அந்த அறிக்கை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.

நிதியமைச்சரே நிதியமைச்சரே
அந்த வரிசையில், அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனம், வங்கிகளில், அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வெளியிடுமாறு, நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கேள்வியெழுப்பினார்... ஆனால், அதற்கு, "ரிசர்வ் வங்கி சட்டப்படி அதை வெளியிட முடியாது" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்திருந்தார்.. இந்நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.. "சட்டம் குறுக்கே வந்தால் அதைத் திருத்துங்கள் நிதியமைச்சரே" என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.. மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை இதுதான்:

ரகசியம் ரகசியம்
"அதானி குழுமம் வங்கிகளில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தீபக் பைஜ் என்கிற உறுப்பினர் கேள்வி (எண் 177/13.03.2023) எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் கடன் குறித்து எந்த விவரத்தையும் தரவில்லை. ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45 E இன் படி வங்கிக் கடன் குறித்த விவரங்கள் ரகசியமானவை, அவற்றை வெளியிட இயலாது என மறுத்துள்ளார். குடியுரிமை குறித்தே சட்ட திருத்தம் வருகிறது. ஒரு மாநிலத்திற்கு இருக்கிற விசேட அந்தஸ்து பறிக்கப்பட்டு ஒன்றிய ஆளுகைப் பகுதியாக மாற்றப்பட முடிகிறது.

திருத்துங்கள் திருத்துங்கள்
விவசாயிகளை கொந்தளிக்க வைத்த 3 சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. பின்னர் திரும்பப் பெற வேண்டியும் வந்தது. ஆனால் தங்களின் பல்லாயிரம் கோடி சேமிப்பு என்ன ஆகும் என்று மக்கள் பதறும் போதும் சட்டத்தின் கீழ் ஒளிந்து கொண்டு ரகசியம் என்கிறது ஒன்றிய அரசு. சட்டம் குறுக்கே வந்தால் சட்டத்தை திருத்துங்கள் நிதி அமைச்சரே. எல்.ஐ.சி அதானி குழுமத்திற்கு தந்துள்ள கடன் டிசம்பர் 31, 2022 அன்று ரூ.6347 கோடிகள். மார்ச் 5, 2023 அன்று ரூ.6182 கோடிகள். எல்.ஐ.சி. தந்துள்ள கடன், பாலிசிதாரர்களின் சேமிப்புகள்தான். கடன்கள் எல்லா முன் எச்சரிக்கைகளையும் கணக்கிற்கொண்டு வழங்கப்பட்டு இருப்பதாக, இந்த அரசு நிதி நிறுவனங்கள் விளக்கம் தருகின்றன.

கிழிந்து தொங்குகிறது
ஆனால் அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது. ஆகவே அதானி நிறுவனங்களில் உள்ள முதலீடு/ கடன் பற்றி விசாரணை தேவை. வங்கிகள் வழங்கியுள்ள கடன், எல்.ஐ.சி தந்திருப்பது போல நிச்சயம் பல மடங்கு இருக்கும். இது மக்கள் பணம். அதை எவ்வளவு யாருக்கு வங்கிகள் தந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. நிதியமைச்சரே.. பறி கொடுத்தவர்கள் பக்கம் சட்டம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால், சட்டத்தை திருத்துங்கள். மக்களுக்கு சொல்லுங்கள் அவர்கள் சேமிப்பின் கதி என்ன? பணத்திற்கு பாதுகாப்பு என்ன? அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுங்கள்" என்று வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications