பாண்டியன் ஸ்டோரில் பாதகமான செயல்...பாவம் முல்லை...உச்சுக் கொட்டும் ரசிகர்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் லேட்டஸ்ட் புரோமோ ரசிகர்களை பீல் பண்ண வைத்துள்ளது.
என்ன...இது திடீரென்று இப்படி எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து விட்டார்களே என்று பலரும் கூறிவருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கூட்டுக்குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் எடுத்து வருவதால் பல வருடங்களாக தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. அண்ணன், தம்பி ஒற்றுமையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த சீரியலின் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் பலருடைய நன்மதிப்பையும், வரவேற்ப்பை பெற்ற ஜோடிகளில் ஒன்றாக கதிர், முல்லை ஜோடி இருந்து வருகிறது. இவர்களுடைய கண்ணியமான காதல் பலரையும் கவர்ந்துள்ளது.

என்றும் மணக்கும் முல்லை
இந்த சீரியலில் எதிர்பாராத சூழ்நிலையில் மூலமாக கதிரும், முல்லையும் கணவன் மனைவியாக மாறி இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருமே காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுடைய காதல் மற்றும் பாசம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் குணம் மற்றும் அன்பை பார்த்து பலரும் இவர்களுக்கு பேன்ஸ்களாக மாறிவிட்டனர். அதுவும் முல்லை கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடிக்கும். ஆரம்பத்திலிருந்தே முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ராவை ரசிகர்கள் முல்லை ஆகவே பார்த்து வந்தனர்.

திடீர் மாற்றம்
முல்லை என்னும் பேரை சொன்னதும் விஜே சித்ராவின் முகம் தான் தற்போது வரைக்கும் பலருடைய நினைவில் வந்து கொண்டிருந்தாலும், அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய இடத்தை காவியா பிடித்துள்ளார். காவியாவும் தற்போது அந்த கேரக்டரில் ஒன்றி இருக்கும் நேரத்தில் தற்போது இந்த கதையில் திடீரென்று எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. பல நேரங்களில் சீரியலில் சண்டை சச்சரவுகளும், குழப்பங்களும் இருந்தாலும் இவர்களுடைய காதல் காட்சிகள் பலருக்கும் பிடித்ததாக இருந்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்குள் ஏற்படும் மன வருத்தத்தை பார்த்து ரசிகர்களும் பீல் பண்ணி வருகிறார்களாம்.

டாக்டர் கூறிய வார்த்தை
ஏற்கனவே திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது தங்களுக்கு குழந்தை இல்லையே என்று பீல் பண்ணி கொண்டு இருந்த கதிர் மற்றும் முல்லையை தனம் சமரசம் பண்ணி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இருவரும் டெஸ்ட் எடுத்து விட்டு வந்து விட்டனர். இன்று தற்போது அந்த டெஸ்ட் ரிப்போர்ட் வந்திருக்கும் நிலையில் இருவருடனும் தனித் தனியாக பேச வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார்.முல்லைக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

கதிருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
இதைக்கேட்டதும் கதிர் கண்கலங்கி பீல் பண்ணியிருக்கிறார். இதை எப்படி முல்லையிடம் கூறுவேன் என்று அவர் பீல் பண்ணி இருந்தாலும், வெளியே வந்து முல்லையை சமாதானம் செய்திருக்கிறார். ஒன்றும் இல்லை என்று...ஆனால் முல்லை தன் மீது சத்தியம் செய்து சொல்லும்படி கேட்டிருக்கிறார். இந்த ஒரு உணர்ச்சிகரமான தருணத்தை பார்த்து இந்த வேதனையை முல்லை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாரோ என்று ரசிகர்கள் பீல் பண்ணி கமெண்டுகளில் கூறிவருகின்றனர்.
-
என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. விஜய் சேதுபதி உருக்கம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications