பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனாவை வெளுத்து வாங்கிய பாண்டியன்.. குமாருக்கு நடந்த நிச்சயதார்த்தம்! அரசி எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial February 21, 2026 Episode) பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 21ஆம் தேதிக்கான எபிசோடில் குமாருக்கு நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்திருக்கிறது அதே நேரத்தில் அலட்சியப்படுத்திய பாண்டியனுக்கு மீனா கோமதி மூலமாக சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் (Pandian Stores 2 serial today episode) இன்றைய எபிசோடில், அரசி மீனாவுக்கு போன் பண்ணி வீட்டில் அம்மா - அப்பா இடையே நடந்த பிரச்சனையை பற்றி சொல்கிறார். அம்மா சாப்பிடாம இருக்காங்க என்று சொல்லியதும் உடனே மீனா கோமதி வீட்டுக்கு கிளம்பி வருகிறார். வந்தவுடனே கோமதிக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கிறார். "இனிமேல் நீங்க அவரை கண்டுக்கவே கண்டுக்காதீங்க... அவர் இங்க இருக்குறதையே நினைக்காதீங்க... உங்க முகத்தை கூட பார்த்து பேசமாட்டாருல்ல, அதே மாதிரி நீங்களும் இருங்க" என்று சொல்லுகிறார்.
"நீங்க வழிய வழிய சென்று பேசுறதால தான் அவர் இறங்கி வரமாட்டாரு... நீங்க கண்டுக்காம இருந்தா அவரே உங்க வழிக்கு வருவார்... உங்க பையனையும் நான் இப்படி தான் டீல் பண்ணுவேன்" என்று ஐடியா கொடுக்கிறார். இதைக் கேட்டு "இனி பாரு என்னோட ஆட்டத்தை" என்று கோமதி, பாண்டியனை பழிவாங்க ரெடியாகிறார்.
பிறகு பாண்டியன் அங்கு வருகிறார். கோமதிக்கு உடல் சரியில்லைன்னா? ஹாஸ்பிடலுக்கு போக வேண்டியது தானே எதற்காக எனக்கு போன் பண்ணி கூப்பிட்டா என்று மீனாவிடம் கேட்க, நீங்க அவங்க கிட்ட பேசுறது இல்லைனு, அவங்க சாப்பிடாம இருக்காங்க என்று சொன்னதும் பாண்டியன் மீனாவை திட்டிவிட்டு போகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: இன்று மயிலுக்கு நடந்த அநியாயம்! பலருக்கு பாடம்.. சிக்கும் சரவணன்! மீனாவால் உடையும் குடும்பம்
மறுபுறம், மீனா வேலைக்கு சேர்த்த இடத்தில் தங்கமயில், மீனாவின் தோழியின் அம்மாவை நன்றாக கவனித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மாலையில் அந்த வயதான அம்மாவின் மகள் வீட்டுக்கு வந்ததும் தங்கமயிலை வீட்டுக்கு கிளம்ப சொல்கிறார். தங்கமயிலும் கிளம்பி வருகிறார்.
இதே நேரத்தில் குமரவேலுக்கு பெண் பார்த்திருப்பதாக முத்துவேல் முன்பே சொன்ன நிலையில், மாப்பிள்ளையை பார்க்க பெண் வீட்டார் வருகிறார்கள். அவர்களுக்கு குமரவேல் பிடித்துப் போக, ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம் வைக்கலாம் என்று பேசிப் முடிக்கிறார்கள். இரு வீட்டாரும் தட்டை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் குமரவேலுக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லை. அவர் அரசியை தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.
பின்னர் தங்கமயில் வீட்டுக்கு வர, "காலையில போன இப்போ தான் வர்ற?" என்று பாக்கியம் கேட்கிறார். அதற்கு மீனா வேலை வாங்கி கொடுத்த விஷயத்தை தங்கமயில் சொல்லுகிறார். அதற்குள் பாண்டியன் கடையிலிருந்து வீட்டுக்கு வருகிறார். அவர் வந்ததும் மீனா சொல்லிக் கொடுத்தபடி கோமதி அவரை முழுக்க கண்டுகொள்ளாமல் இருக்கிறார். வழக்கம் போல பாண்டியன் தன்னிடம் இருந்த பணப்பையை நீட்டி கொடுக்க, அதை வாங்காமல் குத்துக்கல் மாதிரி நிற்கிறார் கோமதி.
பிறகு எல்லோரும் சாப்பிட இருக்கிறார்கள். கோமதி எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறுகிறார். ஆனால் பாண்டியனுக்கு மட்டும் எதுவும் வைக்காமல் இருக்கிறார். அதை பார்த்த பாண்டியன் "ஓஹோ... இப்போ நீ என்னைய கண்டுக்காம இருக்கியா... எனக்கு உன் சாப்பாடே வேண்டாம்" என்று கோபத்தில் எழுந்து சென்று விடுகிறார். இதையடுத்து வீட்டில் நிலைமை எப்படி மாறப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் எபிசோடு முடிகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: மீனாவை ஜெயிக்க சிந்தாமணி போட்ட பிளான்.. ஆப்பு வைக்கும் ஸ்ருதி! குடும்பமே மாறிட்டாங்க! சூப்பர் சீன் -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications