பாண்டியன் ஸ்டோர்ஸ்: திடீரென காணாமல் போன கதிர்.. பிரியும் ராஜி.. பாண்டியன் எடுத்த எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 31ம் தேதிக்கான எபிசோடில், கதிர் மற்றும் ராஜியின் ரொமான்ஸ் காட்சிகளும், அவர்கள் இருவருக்கும் இருக்கும் அன்பு தான் இன்றைய எபிசோடு முழுக்க காட்டப்பட்டது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ராஜியின் அப்பா முத்துவேல், காரைக்குடியில் உள்ள கோச்சிங் சென்டரில் ராஜியை சேர்த்துவிடுவதாக முன்பே சொல்லியிருந்தார். அதை மனதில் வைத்து கதிர், ராஜியிடம் பேசி அந்த சென்டரை நேரில் போய் பார்க்க முடிவு செய்கிறார். அங்கு ஒரு லட்சம் ரூபாய் பீஸ் கேட்டதும் ராஜி வேண்டாம் என்று மறுக்கிறார். ஆனால் கதிர், எவ்வளவு பணம்னாலும் பரவாயில்லை, இங்கயே சேரலாம் என்று முடிவாக சொல்கிறார்.

அந்த கோச்சிங் சென்டரில் இரண்டு நாள் ட்ரெயினிங் சென்னை போய் செய்யணும் என்று சொன்னதும், ராஜியை கூட்டிக்கொண்டு சென்னை போக கதிர் தயாராகிறார். இதை பாண்டியனிடம் சொன்னால் அவர் போக வேண்டாம் என்று சொல்லுவார் என்று ராஜி பயப்படுகிறார். ஆனால் பாண்டியன், "ரெண்டு பேரும் பத்திரமாக போயிட்டு வாங்க" என்று அனுப்பி வைக்கிறார்.
கதிர், தனது நண்பர்களுடன் ராஜியை காரில் அழைத்துக்கொண்டு சென்னை கிளம்புகிறார். "கார்ல தூங்கு, நாளைக்கு கிளாஸ்ல தூங்கிடப் போற" என்று சொல்ல, ராஜி "எத்தனை நாள் வேணாலும் நான் தூங்காம இருக்க முடியும்" என்று சொல்கிறார். ஆனாலும் கொஞ்ச நேரத்திலேயே கதிரின் தோளில் சாய்ந்து நன்றாக தூங்க ஆரம்பிக்கிறார். அவளை பார்த்து கதிர் சிரித்துக்கொண்டு, "நாள் கணக்குல தூங்காம இருக்கப் போறவளா இவ?" என்று நகைச்சுவையாக நினைக்கிறார்.
ஒரு இடத்தில் கார் நின்றதும் ராஜி திடீரென்று முழித்துப் பார்க்கிறார். அப்போதுகாரில் யாரும் இல்லாததை பார்த்து பயந்து வெளியில் வந்து கதிரை தேடி அழைக்கிறார். அந்த சமயத்தில் கதிரின் குரல் கேட்க, நிம்மதி அடைகிறார். "ரெஸ்ட்ரூமுக்கு போயிட்டு வந்தேன். உன்னை அப்படியே விட்டுட்டு போய்டுவேன்னு நினைச்சியா?" என்று கதிர் கேட்கிறார்.
2014–2022 சின்னத்திரை மாநில விருது, 'இந்த’ சீரியல் மற்றும் நடிகர்களுக்கு தான்.. தெய்வமகள் பிரகாஷ் உருக்கம்
பின்னர் இருவரும் ஒரு ரூமுக்கு சென்று தயாராகி கிளாஸுக்கு கிளம்புகிறார்கள். ராஜியை பார்த்து கதிர் மெய் மறந்து நிற்க, "என்னாச்சு?" என்று ராஜி கேட்கிறார். டீ குடிக்கும்போது, "ஒரு லட்சம் பணத்துக்கு என்ன பண்ணப் போற?" என்று ராஜி கேட்கிறார். "உன் அப்பாவிடமிருந்து கேட்கலாமா?" என்று கதிர் சொல்ல, "அவர் கேட்டா கொடுத்துருவார். ஆனா நீதான் வாங்க மாட்டியே" என்று ராஜி சொல்கிறார்.
அந்த நேரத்தில் ராஜியின் கையில் சூடான டீ கொட்டி விடுகிறது. கதிர் பதறி "ஹாஸ்பிட்டலுக்கு போகலாமா?" என்று கேட்க, "அவ்வளவு சீன் எல்லாம் இல்லை, நீ ரொம்ப ஓவரா பண்ண ஆரம்பிச்சுட்ட" என்று ராஜி கிண்டல் செய்கிறார். அப்போது கதிர் அவளுடைய கையை பிடித்து, "இன்னைக்கு ஏன் நீ இவ்வளவு அழகா இருக்க?" என்று கேட்கிறார். இதனால் ராஜி ஆச்சரியமாக அவனை பார்த்துக் கொண்டே நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிகிறது.
அடுத்த எபிசோடில் இவர்களுக்குள் என்ன நடக்கப்போகிறது, கோச்சிங் சென்டர் விஷயம் எந்த திசையில் போகும் என்பதே முக்கியமாக பார்க்க வேண்டியதாக இருக்கும்.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?











Click it and Unblock the Notifications