Petthi Review: ராம் சரணின் 'பெத்தி' பார்த்து ஷாக் ஆன செய்யாறு பாலு.. 135 கோடி வசூலித்த படத்தின் கதை இதுதானா?
சென்னை: இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. வெளியான முதல் நாளிலேயே ரூ.135.36 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பிரபல விமர்சகர் செய்யாறு பாலு இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

'ஆர்ஆர்ஆர்'க்கு பிறகு புதிய படம்
'ஆர்ஆர்ஆர்' வெற்றிக்குப் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியாகும் முக்கிய திரைப்படம் என்பதாலும், இயக்குநர் புச்சிபாபு சனா உருவாக்கியிருக்கும் கிராமத்து பின்னணிக் கதையாலும் 'பெத்தி' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. தமிழ்நாட்டிலும் டப்பிங் படமாக இருந்தாலும் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. சமூக வலைதளங்களிலும் படம் குறித்து பெரிய அளவில் பில்டப் உருவாக்கப்பட்டிருந்தது.
கதை என்ன?
படத்தின் கதை ஒரு தேசிய அளவிலான விவாதத்துடன் தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா குறைவான பதக்கங்களை மட்டுமே வெல்வதை விமர்சிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர், இனிமேல் விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்க வேண்டாம் என்று கோபப்படுகிறார்.
அப்போது ஒரு அதிகாரி, "இந்த நாட்டில் திறமை இருக்கிறது. அதை நான் நிரூபிக்கிறேன்" என்று சவால் விடுகிறார். அதன்பிறகு அவர் தேடி செல்லும் இடம்தான் மலைகளால் சூழப்பட்ட தொலைதூர கிராமம். அங்கே அனைவரும் ஒரே பெயரைச் சொல்கிறார்கள் - 'பெத்தி'. அந்த கிராமத்தில் வாழும் ராம் சரண் யார்? அவர் எப்படி ஒரு சாதாரண கிராம இளைஞனாக இருந்து அனைவரின் நம்பிக்கையாக மாறுகிறார்? என்பதே படத்தின் மையக்கரு.

கதையிலேயே லாஜிக் இல்லை
படத்தை பார்த்துவிட்டு பேசிய செய்யாறு பாலு, முதல் கட்டத்திலேயே கதையின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளார். "ஒரு கிராமத்துக்கு நடந்து செல்ல இரண்டு நாள் ஆகும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதே இடத்தில் ரயில் பாதையும் இருக்கிறது. ரயில் நின்றால் அரை மணி நேரத்தில் போய்விடலாம் என்கிறார்கள். இப்படிப்பட்ட முரண்பாடுகளை எப்படி நம்புவது?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெகபதி பாபுவின் போராட்டமும் விமர்சனம்
படத்தில் ஜெகபதி பாபு தொடர்ந்து ரயில் பாதையில் சிவப்பு துணியை காட்டி போராடும் காட்சிகளையும் அவர் விமர்சித்துள்ளார். "ஒவ்வொரு முறையும் சிவப்பு துணியை காட்டினால் ரயில் நின்றுவிடுமா? இது சினிமா சுதந்திரத்தை தாண்டி செயற்கையாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

ஜான்வி கபூருக்கு வேலை என்ன?
படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூரின் கதாபாத்திரம் பற்றியும் செய்யாறு பாலு அதிருப்தி தெரிவித்துள்ளார். "ஜான்வி கபூர் ஏன் இந்தப் படத்தில் இருக்கிறார் என்பதே புரியவில்லை. ஒரு ஹீரோயின் வேண்டும் என்பதற்காகவே அவரை சேர்த்தது போல தெரிகிறது. கதையோடு அவருக்கு பெரிய தொடர்பே இல்லை" என்று கூறியுள்ளார்.
செய்யாறு பாலு மேலும் கூறுகையில், "படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தியேட்டரில் இருந்து பலர் வெளியே சென்றதை பார்த்தேன். இடைவேளைக்கு வந்தபோது ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன. கடைசிவரை இருந்தவர்களும் படம் பார்த்ததற்காக அல்ல, ஏசி குளிரில் கொஞ்சம் தூங்கிவிட்டு போகலாம் என்பதற்காக இருந்தது போல தோன்றியது" என்று கூறியுள்ளார்.
ராம் சரண்
ராம் சரண் குறித்து பேசும்போது, "ராம் சரண் மிகப்பெரிய நடிகராக இருக்கலாம். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் என்ன நடித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கதையும், திரைக்கதையும் ரசிகர்களை ஈர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
போதும்டா சாமி
விமர்சனத்தின் இறுதியில் அவர் கூறிய ஒரு வரிதான் தற்போது வைரலாகி வருகிறது. "ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் படம் பார்க்க முடியவில்லை. 'போதும்டா சாமி' என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்" என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

வசூல் வேட்டை Vs விமர்சனம்
ஒருபுறம் முதல் நாளிலேயே ரூ.135.36 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் 'பெத்தி', மறுபுறம் சில விமர்சகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் ஒரு தரப்பு, "இது ராம் சரணின் கரியரில் இன்னொரு மாஸ் வெற்றி" என்று கொண்டாடி வருகின்றனர்.
மற்றொரு தரப்பு, "வசூல் பெரியதாக இருக்கலாம்... ஆனால் படம் உண்மையிலேயே அந்த அளவுக்கு இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும், வெளியான முதல் நாளிலேயே 'பெத்தி' திரைப்படத்தை விட செய்யாறு பாலுவின் "போதும்டா சாமி" விமர்சனம்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications