எனக்கு 20 உனக்கு 28... காதல் நினைவுகளை பகிர்ந்த அர்ச்சனா...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எடுத்த புகைப்படங்களை அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.
அர்ச்சனாவின் பழைய புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகின்றனர்.
காதலோடு எடுத்த புகைப்படங்களுக்கு கலக்கலான கேப்ஷன் கொடுத்திருக்கிறார் அர்ச்சனா.

அர்ச்சனாவின் போஸ்ட்
தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமாகி தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் அர்ச்சனா, தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு முன்பு உள்ள காதல் வாழ்க்கையை ரசிகர்கள் மத்தியில் இன்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இவருடைய இந்த போஸ்ட் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மலரும் நினைவுகள்
வாழ்க்கையில் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டு அதற்கு பிறகு காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோலத்தான் அர்ச்சனாவும் நிச்சயதார்த்தம் முடிந்ததற்குப் பிறகு திருமணம் வரைக்கும் உள்ள காலகட்டத்தில் காதலும், பாசமும் என்றும் மறக்க முடியாது. அந்த நினைவுகளை தற்போது நினைத்து மகிழ்ந்துள்ளார்.

இளமைப்பருவ போட்டோக்கள்
அர்ச்சனாவின் இன்ஸ்டாகிராம், மட்டுமல்லாமல் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் அவருடைய இளமைப் பருவ காதல் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவருடைய ரசிகர்கள் அதை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். அர்ச்சனாவுக்கு இருபது வயது இருக்கும்போது அவருடைய கணவருக்கு இருபத்தி எட்டு வயதாக இருந்திருக்கிறது. அப்போது இவர்கள் இருவரும் எடுத்த போட்டோஸ்கள் தான் இப்போ சமூக வலைத்தளத்தில் வைரல்

கலாய்த்த மகள்
அர்ச்சனாவின் போஸ்ட் பார்த்ததும் நெட்டிசன்கள் கலாய்ப்பதற்கு முன்னாடியே அவருடைய மகள் பார்....ரா என்று கலாய்த்திருக்கிறார். இவருடைய இந்த ஒரு ரிப்ளை எதிர்பார்க்காத ரசிகர்கள், தொடர்ந்து அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்களை கூறியும் ஆசீர்வாதங்களை அளித்தும் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல சின்னத்திரை நடிகைகளும் இந்த போட்டோஸ்க்கு விதவிதமாக கமெண்டுகளை அளித்து வருகின்றனர். ஏற்கனவே இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ஒரு சில நாட்கள் வீட்டிலேயே இருந்த இவர் தற்போது தான் தன்னுடைய பணியை தொடங்கி இருக்கிறார்.இந்த நிலையில் இவர் உடல்நிலையில் நன்றாக மாறி சிறப்பாக பணியை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications