ஈபிள் டவரை கவர் பண்ணி டிடி போட்ட போஸ்ட்...கமெண்டுகளை கொட்டும் ரசிகர்கள்
சென்னை: வெளிநாடு சென்ற இடத்தில் போட்டோ ஷூட் எடுத்த டிடியின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
ஈபிள் டவர் முன்பு நின்று கொண்டு அதை பற்றி விளக்கமாக கேப்ஷன் போட்ட டிவிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றது.
பல நாட்களுக்குப் பிறகு இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் லைக்குகளை குவிக்கின்றனர்.

வைரலாகும் டிடியின் போட்டோக்கள்
ஈபில் டவர்... கவர்... பண்ணி டிடி போட்டிருக்க போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தங்களுக்கு பிடித்த செலிபிரிட்டியை பிரஷ்ஷாக பார்த்ததால்....பெருசாக டிடியின் போட்டோக்களை வைரலக்கி வருகின்றனர்.

கலகலப்பான பேச்சு திறமை
சின்னத்திரையில் 'டிடி" என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனாலேயே இவருக்கு சிறுவயதிலேயே சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு எளிதாக அமைந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சீரியல் மட்டுமின்றி ஒருசில சினிமாக்களிலும் நடித்து... பொது வெளியில் தனக்கென ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார். துணிவான மட்டும் கலகலப்பான தன்னுடைய பேசும் திறமையை நிகழ்ச்சி தொகுப்பு துறை பக்கம் திருப்பிய 'டிடி'...அதில் தன்னை நிரூபித்ததன்மூலம் புகழ் உச்சியை அடைந்தார்.

அன்புடன் டிடி
விஜய் டிவி நிறுவனம் டிடி யை குத்தகைக்கு எடுத்தது போல், 'அன்புடன் டிடி' 'காபி வித் டிடி' என்று இவரது பெயரிலேயே இவருக்கான ஷோக்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்தியது. இவரும் தன்னுடைய நிகழ்ச்சியை தொகுக்கும் திறமை மற்றும் ஜாலி அரட்டை மூலம் அந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் வெற்றி பெறவும் வைத்தார். 'குழந்தையை பெற்று.. விஜய் டிவி இடம் ஒப்படைத்தால் போதும்... அவர்களே அதை வளர்த்து.. திருமணம் செய்து வளைகாப்பு நடத்தி.. விவாகரத்தும் செய்து வைத்து விடுவார்கள்..!!' என்று விஜய் டிவியை கலாய்க்கும் அளவிற்கு விஜய் டிவி 'டிடி' கேரியரில் ஒரு அங்கமாகவே இருந்தது.

மனம் தளராத சுதந்திரப் பறவை
பெண்ணியவாதியான 'டிடி'க்கு அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. இதனால் இல்லற வாழ்க்கையில் கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிய 'டிடி' அதன்பின்னும் நிகழ்ச்சி தொகுப்பு, ரியாலிட்டி ஷோ போட்டியாளர்,என்று பிஸியாகவே..கொஞ்சமும் மனம் தளராமல் தன் மனம் விரும்பியபடி சுதந்திரமாக இருந்து வருகிறார். இவருடைய விவாகரத்து இவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையை சார்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. காரணம் சினிமா துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களின் நட்புகளையும் 'டிடி' பெற்றிருந்தார்.

பாரிஸில் சுற்றுப்பயணம்
பெரும்பாலான சுற்றுலா பிரியர்களின் கனவு தளமாகவும், விருப்பத்திற்குரிய இடமாகவும் இருக்கும்.. பாரிசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 'டிடி' அங்கு உள்ள உலக அதிசயங்களையும்,புராதான சின்னங்களையும், புகைப்படம் எடுத்து புகைப்படத்துடன் அந்த இடம் குறித்த வரலாற்றையும், அதிசயங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அப்படித்தான் தற்பொழுது உலக அதிசயமான ஈபில் டவர் முன்னின்று இவர் எடுத்துள்ள போட்டோ மற்றும், அந்த ஈபில் டவர் குறித்த குறிப்புகள்.. ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் அதைப்பற்றி தெரிந்திருந்தாலும்.. அதை டிடி சொல்லும் போது புதிதாக இருப்பதாக அவரது ரசிகர்கள் ஆஹா..! ஓஹோ..! என்றும்..அப்படியா..!! என்றும் ஆச்சரியத்தோடு போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications