இதற்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல...கதறும் பிரியங்கா.. பதறும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் இனி எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என பிரியங்கா பதறி வருகிறார்.
ரசிகர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சியில் வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருக்குள் திடீர் பயம் ஏற்பட்டிருக்கிறது.
நாங்க மனசுல நினைத்ததை அப்படியே சொல்லிட்டாங்களே என்று நெட்டிசன்கள் ஒருபக்கம் பிரியங்காவை கலாய்த்தும் வருகின்றனர்.

எனர்ஜி ஊட்டும் வார்த்தை
பிக் பாஸ் 5 வது சீசனில் அப்பப்போ..கொழுத்தி போட்டு விளையாட்டை விறுவிறுப்பாக்கி கொண்டிருக்கும் பிரியங்கா தற்போது தான் செய்வது சரியா??தவறா??என்று குழப்பத்தில் இருக்கிறார் போல, அதனால்தான் இதுவரைக்கும் நம்பிக்கையாக இருந்த பிரியங்கா தற்போது விரக்தியில் பேசியிருக்கிறார். அதைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி வருகின்றனர். ஆனால் அவருடைய கெத்தான அந்த வார்த்தைதான் ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறது .

வேற திட்டமும் கைவசம் இருக்கு
எனக்கு விஜய் டிவியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் என்னுடைய மொட்டைமாடியில் ஒரு செட் போட்டு என் போனில் வீடியோ எடுத்து யூடியூப்பில் அப்லோட் பண்ணி கொண்டே இருப்பேன் என்று இவர் எதார்த்தமாக சொல்லிக்கொண்டு இருந்தாலும் இதுதான் இவருடைய மனதில் இருக்கிறதா?? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை இருக்கு என்று பேசிய பிரியங்கா தற்போது இப்படி பேசி இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்துவருகிறது.

வாக்குகளில் முதலிடம்
இதுநாள் வரைக்கும் விஜய் டிவியில் செல்லப் பிள்ளையாக இருந்தாலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ தன்னுடைய சொந்த வீடு போல தான் பிரியங்கா வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவர் செய்யும் செயல்களே மட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் தன்னிடம் நடந்து கொள்ளும் முறையை பார்த்ததும் அவருக்கு இந்த மாதிரி சந்தேகம் தோன்றியிருக்கிறது, என்று பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் கூறுகின்றனர். போன வார எலிமினேஷனில் இவருடைய பெயர் இருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு அதிகமான வாக்குகளை கொடுத்து இவர்தான் முதலிடத்தில் இருந்து கொண்டிருந்தார்.

ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது
இந்த வாரமும் பிரியங்காவின் பெயர் எலிமினேஷனில் இருந்தாலும் தற்போது இந்த வாரம் இவர் விளையாடும் விளையாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கிறது. ஆரம்பத்தில் ஜாலியாக இருந்த பிரியங்கா தற்போது அபிஷேக் உடன் சேர்ந்து கொண்டு போட்டியாளர்களை பற்றி இவர் பேசிக்கொண்டிருப்பது, ரசிகர்களுக்கு இவர் மீது வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயே பலர் சமூக வலைத்தளத்தில் அபிஷேக் உடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தால் நன்றாக இருக்கும், அவர் அவராகவே இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவருடன் இருக்கும் சக போட்டியாளர்கள் தற்போது இதே வார்த்தையை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

அந்த மாதிரி நடந்திடக் கூடாது
இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும்போது பிரியங்காவிடம் பலர் இதே மாதிரிதான் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் அதையெல்லாம் கண்டுகொள்ளாத பிரியங்கா நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய வேலையை பற்றி பயம் வந்திருக்கிறது. அதனால் தான் இந்த மாதிரி கூறியிருக்கிறார். ஏற்கனவே போன சீசனில் அர்ச்சனா ஜீ தமிழை விட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அதற்கு பிறகு ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் எதிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் விஜய் டிவியில் வந்துவிட்டார் என்பதால் அப்போ எல்லா இடங்களிலும் அந்த மாதிரி தான் நடந்து கொண்டிருக்கிறதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications