
ரோஜா சீரியல் கதாநாயகி பிரியங்காவின் கண்ணீர் பதிவு "இது முடிவல்ல” உருக்கமான வார்த்தைகள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்கரி, சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
கன்னட நடிகை தமிழில் நடித்த முதல் சீரியலில் நான்கு வருடங்களுக்கு மேலாக ரசிகர்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தான் கற்றுக்கொண்டவைகளையும், அன்பையும் பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
டி.ஆர்.பியில் முதல் ஐந்து இடங்களை பெற்ற சீரியல்கள்..முதல் இரண்டு இடங்களில் எதிர்பார்க்காத சீரியல்கள்

தமிழ் திரைப்படங்களில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் நடிகை பிரியங்கா நல்கரி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது .ஆனால் சன் டிவி ரோஜா என்று சொன்னால் டக்கென்று நினைவிற்கு வந்துவிடும் அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான பிரியங்கா நல்கரி ஒரு கன்னட நடிகையாக இருந்து வந்துள்ளார் .இவர் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர்தான். தெலுங்கு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா நல்கரி முதல் முறையாக சன் டிவி தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து சம்திங் சம்திங், நானே ராஜா நானே மந்திரி, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

தமிழில் தேர்ச்சி
திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நல்கரி சன் டிவியில் ரோஜா சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதும், முதலில் தமிழ் சீரியலில் நடிப்பதற்கு அதிகமாக பயப்பட்டு இருக்கிறார். ஆனால் பெற்றோர் கொடுத்த உத்வேகத்தின் காரணமாக இந்த சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் சீரியலிலே தமிழ் ரசிகர்கள் இந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை அவர் துளி கூட எதிர்பார்க்கவே இல்லையாம். ஆரம்பத்தில் தமிழ் அறவே தெரியாமல் இருந்த இவர் இன்று தமிழில் போஸ்ட் போடும் அளவிற்கு தேறிவிட்டேன் என்பதை பெருமிதமாக அடிக்கடி கூறி வருவார். அதுமட்டுமில்லாமல் எந்த பேட்டியில் இவர் தமிழில் தான் பேசி வருவார் .சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பிரியங்கா செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சகோதரியின் திருமணம்
சமீபத்தில் தான் பிரியங்கா நல்கரியின் சகோதரியின் திருமணம் வெகு விமர்சனமாக நடைபெற்று இருந்தது. பிரியங்கா நல்கரி ஏற்கனவே ஒருவரை காதலித்து எங்கேஜ்மென்ட் முடிந்த நிலையில் அவருடைய திருமணம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நின்று விட்டது. அதற்கு பிறகு திருமண வாழ்க்கையை பற்றி எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தன்னுடைய நடிப்பில் கவனத்தை செலுத்தி வரும் பிரியங்கா நல்கிரி இப்போது ரோஜா சீரியல் முடிவடைய இருப்பதால் மிகுந்த வருத்தத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

உருக்கமான பதிவு
அதில், "என் வாழ்க்கையில் நான் இந்த நான்கு வருடங்களை மறக்க முடியாத பயணம். ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் இங்க வந்த என்னை நீங்கள் எல்லோரும் உங்க வீட்டு பெண்ணாக ஏத்துக்கிட்டீங்க. இந்த நாலு வருஷத்துக்கு மேலாக நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்காக நீங்க எல்லோரும் கொடுத்து இருக்கீங்க. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல. ஆனா இந்த அளவுக்கு எல்லாம் நான் பாக்கியசாலினு தோணுது! சீரியலில் மட்டும் இன்றி உங்கள் அனைவரின் இதயத்திலும் ரோஜாவாக இருக்க எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சரிகம மற்றும் சன் டிவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய நல்ல உள்ளங்களோடு அன்பு ஆசிர்வாதத்துடன் நான் ரோஜாவாக கையெழுத்து விடுகிறேன். இது முடிவில்லாத இன்னொரு புதிய ஆரம்பம். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்போம் என்றும் அன்புடன் என்றும் பிரியங்கா நல்கரியாகவும், ரோஜாவாகவும் ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார்.

வருத்தமான பதிவு
பிரியங்கா நல்கரி ரோஜாவாக சன் குடும்பம் விருதுகளில் மூன்று விருதுகள் வாங்கி இருக்கிறார். சிறந்த வளர்ந்து வரும் ஜோடி என்பதற்காக 2018 சிறந்த நடிகைக்காக 2019திலும் 2019 இல் பிரபலமான ஜோடி என்ற விருதையும் வாங்கி இருக்கிறார். சன் டிவியில் ஏப்ரல் 9,2018 இல் தொடங்கிய ரோஜா சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் மீண்டும் அவருடைய ரசிகர்கள் பலர் வருத்தமாக உணர்வுகளை பதிவிட்டு இருந்தாலும், சன் டிவி சீரியலில் நான் வருவேன் என்று பிரியங்கா கூறி இருப்பதை தொடர்ந்து அவருடைய வருகையை எதிர்பார்ப்பதாகவும் மகிழ்ச்சியோடு கூறி வருகிறார்கள்.