Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நமக்கு சோறு தான் முக்கியம்... பரபரக்க நிரூபித்த ப்ரியங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமக்கு விளையாட்டு தான் முக்கியம் என்று விளையாடிக் கொண்டிருந்த பிரியங்காவை ஒரு பீட்சாவை காட்டி இழுத்துவிட்டது பிக் பாஸ்.

காரசாரமான விவாதத்தோடு கலக்கி கொண்டிருந்த பிரியங்காவின் செயல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

பீட்சாவை பார்த்ததும் பிரியங்காவுக்கு விளையாட்டு மறந்து போய்விட்டதா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்களைக் கவர்ந்த கேரக்டர்

ரசிகர்களைக் கவர்ந்த கேரக்டர்

தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கும் பிரியங்கா தற்போது தன்னுடைய காமெடியாலும், எதையும் கண்டுகொள்ளாத கேரக்டரிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கிக் கொண்டிருக்கிறார். டாஸ்க் என்று வந்துவிட்டால் வெறித்தனமாக தன்னுடைய திறமையை காட்டி கொண்டிருக்கும் பிரியங்கா தற்போது செய்த செயல்தான் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு சில ரசிகர்கள் பிரியங்கா இப்படி செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களாம்.

வெஜ் பிரியர் பிரியங்கா

வெஜ் பிரியர் பிரியங்கா


சாப்பாடு விஷயத்தில் எப்போதுமே அலாதி பிரியம் கொண்ட பிரியங்கா வெஜிடபிள் உணவுகளை விரும்பி சாப்பிடுவது அனைவருக்கும் தெரிந்துதான். பிக்பாஸ் வீட்டிற்குள் அவருக்குப் பிடித்த உணவுகள் இல்லை என்று பல நேரங்களில் பீல் பண்ணி அழுதுள்ளார். என்னதான் விளையாட்டில் அனைத்து போட்டியாளர்களும் கவனமாக இருந்தாலும், பிரியங்கா விளையாட்டுக்கு இடையில் கிடைக்கும் நேரங்களில் தன்னுடைய சாப்பாட்டை மறக்காமல் சாப்பிட்டு விடுவார். இதைப் பார்த்து பல நேரங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆதரவு வலுக்கிறது

ஆதரவு வலுக்கிறது

பிரியங்காவுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் பலர் சாப்பிடுவதற்காக தானே உயிர் வாழ்கிறோம் அப்படிப்பட்ட சாப்பாட்டை விட்டுவிட முடியாது என்றும் பிரியங்காவுக்கு ஆதரவாக சாப்பாட்டு பிரியர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பஸ் டாஸ்க் வந்துள்ளது. இந்த டாஸ்க் முதல் சீசனில் இருந்து தொடர்ந்து கொண்டு இருந்தாலும் இதில் யார் பல சோதனைகளையும் தாண்டி இந்த வீட்டுக்குள்ளே இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதுதானே முக்கியம்

அதுதானே முக்கியம்

ஆரம்பத்திலிருந்து இந்த டாஸ்க்கை எளிதில் விடமாட்டேன் என்று விடாபிடியாக ஒவ்வொரு போட்டியாளர்கள் இடமும் காரசாரமாக விவாதம் பண்ணிக் கொண்டிருந்த பிரியங்கா ஒவ்வொருவரையாக மனதை மாற்றி தன்னுடைய பேச்சு திறமையால் பஸ்ஸை விட்டு இறங்க வைத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் 2 பீட்சாக்களை அனுப்பி அதை வெளியே இருக்கும் போட்டியாளர்கள் சாப்பிட்டு முடிக்கும் படி டாஸ்க் கொடுத்திருந்தது. அதில் வெஜ் பீட்சா மற்றும் சிக்கன் பீட்சா இருந்தது பீட்சா என்பதை கேள்விப்பட்டதும் பிரியங்கா ஆர்வமாக பஸ்சை விட்டு கீழே இறங்கி விட்டார் சாப்பாட்டை பார்த்ததும் பிரியங்காவின் செயலைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+