மீண்டும் அந்த இடத்திற்கே வந்த புகழ்..பழசு மட்டும் மாறலையே.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: புகழ் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கிறார்.
மூன்றாவது சீசனில் புகழ் எப்போது வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது.

மீண்டும் சின்னத்திரையில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தற்போது வெள்ளித்திரையில் காலூன்றியிருக்கும் புகழ் மீண்டும் சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கிறார். இவருடைய அறிமுகம் எப்போது இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. பல நாட்களுக்குப் பிறகு லேட்டஸ்ட் கெட்டப்பில் வலம் வரும் புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி
வெற்றி யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அதற்கான விடா முயற்சி மற்றும் உழைப்பு இருந்தால் எட்டி விடலாம் என்பதற்கு உதாரணமாக புகழ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக புகழ் பல வேலைகளை செய்து கொண்டு சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொரு இடமாக அவமானங்களை சந்தித்து வந்தள்ளார் . தான் சந்தித்த அவமானங்களை எல்லாம் நினைத்து வருந்தி அப்படியே இருந்து விடாமல் இவர் முயற்சியால் ஒவ்வொரு இடங்களிலும் சிறுசிறு வெற்றி பெற்றாலும் அதுவும் தனக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று தற்போது பலருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

மூன்றாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒருசில ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுவிடும். அந்த வகையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதில் முதல் இரண்டு சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் புகழ் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும் அந்த அளவிற்கு பாப்புலர் ஆகாமல் இருந்து வந்தார். இவருடைய லேடி கெட்டப் பலருக்கும் பிடித்திருந்தாலும் அது புகழ் என்பது கூட சிலருக்கு தெரியாமல் இருந்துள்ளது.

மீண்டும் அதே இடத்தில்
இப்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெளியே காலடி எடுத்து வைத்திருக்கும் புகழுக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவில் அந்த திரைப்படங்கள் வெற்றி அடையவில்லை என்றாலும் விரைவில் வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தொடங்கியிருக்கும் குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் இவர் கலந்துகொள்ளவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வாரம் எபிசோடில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். தான் வளர்ந்த இடத்தில் மீண்டும் இவர் களமிறங்கியதும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். உள்ளே நுழைந்ததும் வழக்கம் போல தன்னுடைய அட்ராசிட்டி காமெடியை தொடங்கியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications