ராஜு உடன் நட்பு இப்படித்தான் தொடங்கியது.. மனம்திறந்த அண்ணாச்சி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அந்த வீட்டிற்குள் தனக்கிருந்த நட்பை பற்றி மனம் திறந்து அண்ணாச்சி கூறியுள்ளார்.
எதிர்பாராத நேரத்தில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து ஒற்றுமை தான் காரணமா என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இப்போ நினைத்தாலும் அதை வியப்பாகத்தான் இருக்கிறது என்று தன்னுடைய பீலிங்கை அண்ணாச்சி ரசிகர்களிடம் கொட்டியிருக்கிறார்.

எதிர்பாராது அமைந்த நட்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தாலும் தற்போதைய ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 80 நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதில் கலந்து கொண்டு வெளியே வந்த அண்ணாச்சியை அந்த வீட்டிற்குள் தனக்கு இருந்த அனுபவத்தை பற்றி கூறியிருக்கிறார். ரசிகர்கள் பலருக்கும் ராஜுவுக்கும் எப்படி இவ்வளவு ஒரு நெருக்கமான நட்பு ஏற்ப்பட்டது என்று அதிகமாக கேட்டு வருகிறார்கள். அது பிளான் செய்து எல்லாம் அப்படி ஒன்றும் வரவில்லை. எதிர்பாராத விதத்தில் தோன்றியதுதான் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

கருத்து ஒற்றுமை
பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ஒரு சில பிரச்சினைகள் பூதாகரமாக வெளியாகி போட்டியாளர்களின் பெயர்களை கெடுத்து விடும். ஆனால் ஒருசில செயல்கள் போட்டியாளர்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து விடும். அந்த மாதிரிதான் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இமான் அண்ணாச்சிக்கு நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார். முதல் வாரத்தில் தாமரை வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் அபிநய் டாஸ்க்கில் நடந்து கொண்டதை பார்த்து இமான் அண்ணாச்சி கோபப்பட்டு உள்ளார்.

பேச்சுவார்த்தையை தொடங்கிய ராஜு
தன் முன்னாடி தப்பு நடக்கிறது என்று தெரிந்தால் உடனே எனக்கு சும்மா இருக்க முடியாது. அதை தைரியமாக முகத்துக்கு நேராக எடுத்துக் கூறி விடுவதுதான் என்னுடைய வழக்கம். அந்த மாதிரிதான் நான் அபிநயிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அமைதியாக இருந்து ராஜு பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு பிரச்சனை முடிந்ததும் நான் வழக்கம்போல அமர்ந்து இருந்தேன். அப்போது அபினய் செய்தது தவறு என்று ராஜூ கூறினார்.

தொடரும் நட்பு
ராஜுவிடம் நானும் அப்போதுதான் ஆமா தம்பி நீயும் பார்த்துக் கொண்டுதானே இருந்தா??அவன் செய்கையை நியாயம்தானா என்று பேசினேன். அப்போ எங்கள் இருவருக்கும கருத்து ஒற்றுமை ஒன்றாக இருந்தது. அதற்கு பிறகு ஒரு சில இடங்களில் கூட எங்கள் இருவரின் கருத்துக்கள் வேறுபட்டு இருந்தது இல்லை. அதனால் எங்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஜுவுக்கு பல திறமைகள் இருக்கிறது. நான் பல நேரங்களில் அதனைப் பார்த்து வியப்படைந்து உள்ளேன். நான் ராஜூக்கு என்கரேஜ் கொடுக்கும் போதெல்லாம் அவருடைய ஒவ்வொரு திறமையும் வெளியே வந்து கொண்டிருக்கிறது என்று தங்களுடைய நட்பின் எடுத்துக் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications