வெளிய போய் படிக்கப் போறேன், ஆசையை கூறிய தாமரை..அலட்சியம் செய்த ராஜு
சென்னை: தான் படிக்காததால் பட்ட வேதனையை கூறியிருக்கிறார் தாமரை செல்வி.
அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக பேசாமல் ராஜு நக்கல் செய்து இருக்கிறார் என்று ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.
இதுவரைக்கும் ராஜுவுக்கு ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் தற்போது ராஜுவின் பேச்சை கேட்டு கடுப்பாகி உள்ளனர்.

பாகுபாடு காட்டும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் சக போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்டு வருவது பல சீசன்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது இந்த சீசனிலும் நடைபெற்று வருகிறது என்று பலர் கூறிவருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே தாமரை செல்வி என்னதான் வேலை செய்தாலும் அவருக்கான தலைவர் பதவி கொடுப்பதில் பாரபட்சம் காட்டும் ஒரு சில போட்டியாளர்களின் செயல்பாடுகள் ரசிகர்களை வெறுப்படைய செய்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை ஆதரவு கொடுத்து வந்த ராஜு தற்போது தாமரையை மட்டம் தட்டி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

அனுதாப ஓட்டுக்காக பழகும் போட்டியாளர்கள்
ஆரம்பத்தில் ஒரு சில போட்டியாளர்கள் தாமரை கிராமத்தை சேர்ந்தவர் ஆக இருப்பதால் இவருக்கு எப்படியும் அனுதாப ஓட்டுகள் அதிகமாக கிடைக்கும் என்று அவரை தான் கைவசம் வைத்துக்கொள்ள துடித்துக் கொண்டிருந்தனர்.சில நேரங்களில் அதற்கான பல முயற்சிகளையும் எடுத்து இவரை காப்பாற்றுவது போல அவர்கள் தப்பித்து வந்தனர். ஆனால் இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் யார் எப்படி என்பதை நன்றாக கணித்து தான் இதுவரைக்கும் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அடுத்தவர்களின் நடவடிக்கையைப் பற்றி தாமரையிடம் கூறி அவருக்கு அறிவுரை சொல்வது மற்றும் தாமரை அவ்வப்போது செய்யும் ஒரு சில தவறான செயல்களை அடிக்கடி சுட்டிக்காட்டி கொண்டிருந்தார் ராஜு. தாமரை விஷயத்தில் இவருடைய செயல்பாடுகள் ரசிகர்களிடம் இவருக்கு மேலும் நன் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏக்கத்தை தூண்டிய படிப்பு
தாமரைச்செல்வி அதிகம் படிக்காததால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்களில் அவரால் சில நேரங்களில் படிக்க முடியாமலும் திணறி உள்ளார். தற்போது நேற்றைய எபிசோட்டில் நடந்த கடிதம் எழுதும் நிகழ்வில் கூட தன்னுடைய கடிதத்தை அவர் எழுதாமல் மற்றவர்களிடம் தான் எழுதச் சொல்லியிருந்தார். தற்போது இவர் வெளி உலகத்தை பார்க்கத் தொடங்கி இருக்கும் நேரத்தில் படிப்பின் தேவையை இவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தை பார்த்ததும் இவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. தம்மாலும் படிக்க முடியும் என்பதை இந்த டாஸ்க் உணர்த்தி விட்டது என்பதை இவர் அறிந்துள்ளார்.

அதிரவைத்த ராஜுவின் வார்த்தை
தனது மனதில் இருக்கும் ஆசையான படிக்கும் ஆசையை, இனி நான் வெளியே சென்று படிக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அருகில் இருந்த ராஜூ இவரை நக்கலடிக்கும் விதமாக தனக்கே உரிய நையாண்டி தனத்தோடு ,ஆமா...இனி படித்து என்ன செய்யப் போறா?? என்ற கோணத்தில் இவரிடம் கேள்விகளை கேட்டிருக்கிறார். அதைக்கேட்டதும் தாமரையின் முகம சுருங்கிப் போய்விட்டது. அதை கவனித்த ரசிகர்கள் என்னது ராஜூ இப்படி பேசி விட்டாரே...ஒரு நல்ல விஷயத்தை செய்ய வேண்டும் என்று மனது துடித்து கொண்டிருக்கும் நபருக்கு இப்படி டீ-மோட்டிவ் செய்யலாமா?? இவர் ஆர்வமாக இருப்பவருக்கு ஆறுதல் கூறினால் தாமரை வெளியே வந்ததும் படிக்க வாய்ப்பு இருக்கிறது. படிப்புக்கு வயதில்லை எப்போது வேண்டுமென்றாலும் படித்துக்கொள்ளலாம் என்று பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications