எந்த கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாய் பொருந்தும் கலைஞன் ராஜூ தான்...ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: ராஜூ தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி விடுகிறார் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ராஜுவின் ரசிகர்கள் ராஜுவின் ஒவ்வொரு கேரக்டரையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
கலைஞன் என்றால் இப்படித்தான் தண்ணீர் போல இருக்கவேண்டுமென்று நெட்டிசன்களும் இப்போது ராஜுவின் புகழைப் பாடி வருகிறார்கள்.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பே ராஜூவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ஒரு துணை இயக்குனராகவும், நடிகராகவும், ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பன்முகத் திறமை கொண்ட நபராக இருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல வருடங்கள் போராடி கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக தான் தற்போது இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ராஜுவை புரிந்து கொண்ட ரசிகர்கள்
இதற்கு முன்பு ராஜுவின் செயல்பாடுகளை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சில ரசிகர்கள் நான்கு வருடமாக இந்த பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்று நன்றாக பிராக்டீஸ் எடுத்து வந்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தனர். அதனால்தான் அவர் கோபத்தை கன்ட்ரோல் பண்ணி கொண்டு விளையாட்டை நன்றாக விளையாடி வருகிறார் என்று கூறி வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல ராஜுவின் உண்மையான குணத்தை ரசிகர்கள் புரியத் தொடங்கி விட்டார்கள்.

இயல்பான குணம்
இந்த சீசன் தொடங்கி ஐம்பது நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரையில் பல டாக்ஸ்க்களும், போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் தனக்கு கொடுக்கும் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்து வருகிறார் என்று ரசிகர்கள் ராஜூவக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையிலும் அனைவரையும் சிரிக்க வைத்து விடுவது இவருடைய இயல்பாக இருந்து வருகிறது என்றும் கூறிவருகின்றனர்.

கேரக்டரோடு ஒன்றிய ராஜு
தற்போதைய கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் ஒரு தமிழ் வாத்தியாராக தனக்கு கொடுத்திருக்கும் பொறுப்பை கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் ராஜுவுக்கு அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் ராஜுவுக்கு, வாத்தியார் கேரக்டர் கொடுத்து இருப்பதை விடவும் ஸ்டுடென்ட் கேரக்டர் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பார் என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனாலும் கொடுத்த கேரக்டரை கொஞ்சம்கூட குறை இல்லாமல் சரியாக செய்து வருகிறார் என்று பலதரப்பட்டவர்களும் பாராட்டி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications