கடைசி வரை போராடிய போட்டியாளர்... மூன்றாவது எலிமினேஷன் இவர்தான்.. ரசிகர்களை பீல் பண்ண வைத்து விட்டார்
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் மூன்றாவது எலிமினேஷன் முடிவடைந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களில் தொடங்கி அதற்குப் பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரியாக இரண்டு போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர்.
இதுவரைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, இந்திரஜா சங்கர் இருவரும் வெளியே சென்ற நிலையில் மூன்றாவது போட்டியாளர் இந்த வாரம் எலிமினேஷன் ஆகிருக்கின்றார்.

போட்டிகள் பயங்கரம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புது புது போட்டிகளை வைத்து போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிக்காகவும் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பெற முடியும் என்ற
கடுமையான போட்டிகளை போட்டியாளர்கள் ஜெயித்துக் கொண்டு வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சியில் தற்போது டி ஆர் பி யில் முன்னணியில் இருந்து வருகிறது.

எந்த சாயலிலும் இல்லை
எந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாயல் போல இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த நிகழ்ச்சி பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் காட்டுக்குள்ளே இவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் கழித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் அணியினரும் ஒற்றுமையாக இல்லாமல் அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளும் அவ்வப்போது எட்டிப் பார்த்து விடுகிறது.

ஒரு கோடி...கனவு
இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை இருந்து நிகழ்ச்சியை வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கோடி பரிசு என்பது போட்டியாளர்களின் கனவாக தான் இருந்து வருகிறது. நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே ஒவ்வொருவரும் வெற்றியாளராக வேண்டும் என்றுதான் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் சிறு சிறு தவறுகள் கூட பெரிய அளவில் பாதிப்புகளை கொடுத்துவிடுகிறது. அந்த மாதிரிதான் தற்போது 3 வாரங்களில் 3 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே திறமையானவர்கள் தான்.

மனதை வென்ற போட்டியாளர்கள்
போட்டிக்கு உடல் வலிமை மட்டுமல்ல மன வலிமையும் வேண்டும் என்று அனைவரும் நிரூபித்துக் கொண்டிருக்கும் போது யாரும் யாருக்கும் சளைத்தவரல்ல என்று தான் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் போட்டிகள் என்று வந்துவிட்டால் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும்தான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த ஸ்ருஷ்டி டாங்கே அடுத்ததாக இந்திரஜா என இருவர் வெளியேறி இருந்தாலும் இவர்கள் போட்டியில் ஜெயிக்க வில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை ஜெயித்து விட்டனர்.

மூன்றாவது எலிமினேஷன்
இந்த வாரம் மூன்றாவது எலிமினேஷன் ஆகி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இவர்தான் எலிமினேஷன் ஆவார் என்று போட்டியாளர்கள் அடிக்கடி கூறிக் கொண்டு இருந்ததாலோ என்னவோ இந்த வாரம் ராம் வெளியேறிவிட்டர். இந்த நிகழ்ச்சியில் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் சிறு சிறு கவனக்குறைவினால் செய்யும் செயல்கள் இவருக்கு வினையாக முடிந்துவிட்டது, என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். கடைசியாக நேற்று பார்வதிக்கும் இவருக்கும் நடந்த போட்டியில் கூட இவருடைய அவசரத்திலும் படபடப்பினாலும் போட்டியை ஜெயிக்க முடியாமல் ஆகிவிட்டது. அதனாலேயே இவர் இந்த வாரம் எலிமினேஷன் ஆகிவிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் வெளியே வந்த பிறகு அவருடைய துறையில் நன்றாக ஜொலிப்பார் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications