அதற்குள் ஹேப்பி நியூஸா? மகாலட்சுமிக்கு குவியும் வாழ்த்துக்கள்..எதிர்பார்த்தது நடந்து விட்டதே
சென்னை: தற்போது ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வரும் மகாலட்சுமி வெளியிட்ட மகிழ்ச்சியான போஸ்ட் ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கிய மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்த ஒரு சில நாட்கள் தான் ஆன மாதிரி இருந்து. அதற்குள் ஒரு மாசம் ஆயிடுச்சா? என அனைவரும் கேட்டு வருகிறார்கள்.
இப்ப வரைக்கும் ட்ரெண்டிங் ஜோடியாக இருக்கும் இவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ட்ரெண்டிங் ஜோடி
சமூக வலைதளத்தை திறந்து பார்த்தாலே அங்கே அங்கே வலம் வரும் மகாலட்சுமி மற்றும் ரவீந்திரருடைய புகைப்படங்கள் ஒரு சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திடீர் திருமணம் செய்து ஒரே நாளில் ஒபாமாவாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி ரவீந்தருக்கு வாழ்த்துக்கள் மட்டுமல்லாமல் பல நெகட்டிவ் கருத்துக்களும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப முதலே இதையெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம் என்று எடுத்துக் கொண்ட இந்த ஜோடி இப்போது மட்டும் இதை பெரியதாகவா எடுத்துக் கொள்வார்கள்? அதை கண்டு கொள்வதே கிடையாது.

கலாய்ப்புக்கு அஞ்சுவதில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்யும் ரவீந்தரரை உடல் உருவத்தை வைத்து பல நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வந்தனர். அதையெல்லாம் எப்போதுமே கண்டு கொள்ளாத ரவீந்தர் தன்னைத்தானே பேட்மேன் என்று அழைத்துக் கொண்டார். தன்னை இவர் கொழுப்பு மனிதன் என்று அழைத்துக் கொள்வதால் இதுக்கு எப்படி கருத்து சொல்வது என்றே தெரியாமல் சில நெட்டிசன்கள் குழம்பி வந்தனர். அந்த அளவிற்கு இப்படித்தான் பலரும் நினைப்பார்கள் என்பதை தெரிந்து தன்னை கலாய்க்கும் நெட்டிசனுக்கு தக்க பதிலடித்து கொடுத்து வந்தார்.

தொடர்ந்து வந்த சர்ச்சைகள்
சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி தொகுப்பாளராகவும் பலருக்கும் பரிச்சயமானந்தான். அதைவிட சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயரை சர்ச் பண்ணி பார்த்தாலே இவரைப் பற்றி பல பரபரப்பான செய்திகள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் வகையில் தான் இருந்து வந்தது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இவருக்கும் இவருடைய கணவருக்கும் ஏற்பட்ட தகராறு, அதற்குப் பிறகு இவருக்கும் சீரியல் நடிகருக்கும் தவறான உறவு இருப்பதாக அந்த நடிகரின் மனைவி சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயரை சொல்லி பல்வேறு தகவல்களை கூறி வந்தார்.

ஒரு மாதம் ஆகிவிட்டது
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் சமூக வலைத்தளத்தில் வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு கண்டுகொள்ளாமல் இருந்து வந்தாலும் தற்போது இவர்களுடைய திடீர் திருமணம் வேற லெவலில் சமூக வலைத்தளத்தையே அல்லல்படுத்தி விட்டது. தற்போது இவர்கள் திருமணத்தை எளிமையாக செய்திருந்தாலும், இவர் எதிர்பார்க்காத வகையில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களுடைய புகைப்படங்கள் பலருக்கும் மோட்டிவேஷனாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் திருமணம் முடிந்து தற்போது ஒரு மாதம் ஆன மகிழ்ச்சியை கொண்டாடி ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கின்றனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
உயிரே போயிடும்னு நினைத்தேன்! அந்த அளவிற்கு வலி, வேதனை! பெங்களூரில் நடந்த சம்பவம்! நடிகை ஐஸ்வர்யா உருக்கம்












Click it and Unblock the Notifications