பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பகத்.... இதுக்காகவே இவர வாழ்த்தலாம்...!!!
சென்னை: இந்த வருடம் தன் நகைச்சுவையான நடிப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக உருவாகி இருக்கிற நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி யின் பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் படங்களில் காதல்,சென்டிமென்ட் காட்சிகளை விட காமெடி காட்சிகளுக்கு அதிகமான வரவேற்பு இருக்கும்.
ஒரு படத்தில் அனைத்தும் சரியில்லாமல் இருந்தும் காமெடி மட்டுமே சரியாக அமைந்து செம ஹிட்டான படங்களும் இருக்கிறது. இதனால்தான் புதுப்புது காமெடியன்கள் பலர் உருவாகி வருகின்றனர்.

நகைச்சுவை மன்னர்களின் வரிசையில்
தங்கள் பாணியில் அவர்களும் மக்களை சிரிக்க வைத்து தங்களுக்கான அங்கீகாரங்களை பெற முயற்சி செய்து வருகின்றனர்.தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எண்ணற்ற நகைச்சுவை நடிகர்கள் உருவாகி இருந்தாலும் குறிப்பிடத்தக்க சிலர் மட்டுமே மக்கள் மனதில் நகைச்சுவை மன்னர்களாக அமர்ந்திருக்கின்றனர். நாகேஷ், தங்கவேலு, கவுண்டமணி,செந்தில், வடிவேலு, ஜனகராஜ், போன்ற சிலர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

வித்தியாசமான திறமை
இவர்கள் அனைவரும் தங்கள் உடல் மொழி மூலமும் தங்களுக்கான வசனங்களை தாங்களே எழுதிக் கொண்டு பேசுவது என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ஒரு பாணியை பின்பற்றியே பெரிய அளவில் நகைச்சுவை நடிகர்களாக நிலைத்திருக்க முடிந்தது. ஆனால் ரெடின் கிங்ஸ்லி அவர்கள் எந்தவித பெரிய மெனக்கெடலும் இல்லாமல் தன்னுடைய டயலாக் டெலிவரி செய்யும் விதத்தில் வித்தியாசம் கட்டுவதன் மூலம் மட்டுமே இன்று முக்கிய நகைச்சுவை நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

காமெடி ஸ்டைல்
1968 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் ரெடின் கிங்ஸ்லி. பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் நண்பரான இவர் முதன்முதலாக நெல்சன் அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் படத்தில் தான் நடிகராக அறிமுகமாக இருந்தார்.ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால், அதே இயக்குனரின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்திலேயே இவரது காமெடி ஸ்டைல் ரசிக்கும்படி இருந்தது. அதைத்தொடர்ந்து எல்.கே.ஜி, கூர்க்கா, ஏ1, டாக்டர், என்று இவர் நடித்த அத்தனை படங்களிலும் இவரது காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கூட்டத்தில் முந்திரி கொட்டை போல் முந்திக் கொண்டு பேசுவது, சொல்லுவதை தவறாக புரிந்து கொண்டு குண்டக்க மண்டக்க பேசுவது, பேசுறது எல்லாம் சத்தமா பேசுறது,போன்ற தனக்கென ஒரு காமெடி பாணியை பின்பற்றி காமெடி பண்ணி வரும் ரெடின் கிங்ஸ்லி அடுத்த வருடம் வரை தன் கால்ஷீட்டை ஃபுல்லாக வைத்திருக்கிறார்.அத்தனை படங்களும் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள். ஸ்டார்டிங் ட்ரபுளாக துவங்கி நிதானமாக ஆரம்பித்து தற்பொழுது டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி யின் சினிமா வாழ்க்கை எந்தவித வேக தடையுமின்றி சிறப்பாக செல்ல அவருடைய பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர், சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்கள் இவருக்கு மீம்ஸ்களை போட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications