Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயில் கைவைத்து "உஸ்ஸ்" சொன்ன சனம்.. உற்றுப் பார்த்து அசந்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸுக்குப் பிறகு சனம் ஷெட்டிக்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். இன்ஸ்டாகிராமில் சனத்தைப் பார்க்காவிட்டால் அவர்களுக்கு போரடித்து விடுகிறதாம்.

பிக் பாஸ் வீட்டில் சனம் நிறைய நல்ல பெயரை சம்பாதித்தார். அது இப்போது வெளியில் வந்த பிறகும் தொடர்கிறது.

அவரது இன்ஸ்டாகிராமில் இப்போதெல்லாம் அடிக்கடி ஏதாவது படம் போட்டுக் காட்டுகிறார். எம்புட்டு நாளாச்சு இப்படி பார்த்து என்று ரசிகர்களும் குதூகலமாகி விடுகிறார்கள்.

வயசு குறைந்து போச்சே

வயசு குறைந்து போச்சே

மண்டை மேல ரெண்டு கொண்டையோடு வாயில் கைவைத்தபடி சனம் போட்ட போஸ்ட் பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் சுற்றி சுற்றி வருகின்றனர். என்னம்மா இப்படி பண்றிங்களேமானு சிலர் கலாய்க்கிற மாதிரி பத்து வயது குறைந்து குழந்தையாக மாறிய மாதிரி இருக்கேன்னு கொஞ்சும் ரசிகர்களின் அலும்பும் தாங்கல.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

ஒரு சூப்பர் மாடலாக கலக்கிக் கொண்டிருந்த சனம் தற்போது தான் ஒரு மாடல் என்பதை நிரூபித்திருக்கிறார் .ஏற்கனவே இவருக்கு பின்னாடி படை பலத்தோடு இருக்கும் ரசிகர்கள் இந்த போஸ்ட் பார்த்து கொஞ்சம் ஃபீலாகித்தான் போயிருக்கிறார்கள். சீக்கிரத்தில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துக்களையும் கூறிவருகிறார்கள்.

உண்மை முகம்

உண்மை முகம்


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் சனத்தின் கேரக்டரை ரசிகர்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டு இருந்தனர் .ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவருடைய உண்மையான கேரக்டரை புரிந்து கொண்ட ரசிகர்கள் அதற்கு பிறகுதான் அவருக்கு ரசிகர்கள் ஆகவே மாறிவிட்டார்கள் .எதற்கும் பயப்படாத போல்டான கேரக்டர் இவருடைய தனி சிறப்பு தான்.

ஒரே பாசமழை தான் போங்க

ஒரே பாசமழை தான் போங்க


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதுவும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது அவரை விடவும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி இருந்தனர். இந்த மாதிரி எல்லாம் யாருக்கும் அமைந்து விடுவதில்லை. இவருடைய உண்மையான கேரக்டருக்கு ரசிகர்கள் இவர் மீது பாசமழை பொழிகின்றனர்.

ஆரம்பிச்சிட்டாரு சனமும்

ஆரம்பிச்சிட்டாரு சனமும்

தற்போது இவர் ஒரு சில படங்களில் கமிட்டாகி இருந்தாலும் இன்னும் அந்த திரைப்படங்கள் வெளி வரவில்லை அதற்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது இவருடைய இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து குஷியாகி வருகின்றனர். அடிக்கடி இவர் இப்படி போஸ்ட் போட மாட்டார் என்றுதான் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப சனமும் இப்போ போஸ்ட் போட ஆரம்பித்து இருக்கிறார். அதுவும் தற்போதைய லேட்டஸ்ட் போட்டோ வேற லெவல் தான்.

வாயில் கை வைத்தபடி

வாயில் கை வைத்தபடி

ரெட் கலர் கவுனில் வாயில் கை வைத்தபடி இவர் கொடுத்த போஸ் பார்த்து சிவப்பு தேவதை ,அழகுச் செல்லம் என்று பல செல்லப் பெயர்களால் கொஞ்சி கமெண்டுகளை பொழிகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட கன்டஸ்டன்ட்களும் கமெண்டுகளை போட்டிருக்கின்றனர் .போற போக்கை பார்த்தா சனத்திற்காக ரசிகர்கள் படமெடுக்க ஆரம்பித்து விடுவார்கள் போல.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+