ஆண் குழந்தை பிறந்தது.. சஞ்சீவ் போட்ட போட்டோ!.. இனி என்னால் முடியாது! ஆல்யா பதிலால் ஃபேன்ஸ் அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியான ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது ராஜா ராணி சீரியல். இதில் ஆல்யா மானசாவும் சஞ்சீவும் லீடு ரோல் செய்திருந்தார்கள். வீட்டில் பணிப்பெண்ணான ஆல்யாவை எஜமானரின் மகன் சஞ்சீவ் திருமணம் செய்து கொள்வது, அந்த பெண்ணை அந்த குடும்பத்தினர் மருமகளாக பார்க்காமல் வேலை செய்யும் பெண்ணாகவே பார்ப்பது என கதை களம் சூடாக நகர்ந்து சுபமாக முடிந்தது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஐலா சையது என்ற பெண் குழந்தை உள்ளது.

ராஜா ராணி 2
இதன் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் தொடங்கப்பட்டது. இதில் ஆல்யா மானசா நடித்திருந்தார். சஞ்சீவுக்கு பதில் சித்து நடித்திருந்தார். இந்த சீரியலில் போலீஸ் அதிகாரியாக துடிக்கும் சந்தியா எனும் கேரக்டரில் ஆல்யா நடித்திருந்தார். ஆனால் பெண் என்றால் வீட்டு வேலை செய்ய வேண்டும், மாமனார் மாமியாரை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கதை என்ன
கணவரை அன்போடு கவனித்து கொள்ள வேண்டும். இதுதான் மனைவியின் வேலை என நினைக்கும் மாமியார்! மாமியாருக்கு பிடித்த மருமகளாக சந்தியா இருப்பாரா இல்லை சந்தியாவின் கனவை நனவாக்கும் கணவராக சரவணன் இருப்பாரா என்பதுதான் மீதி கதை. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆல்யா மீண்டும் கர்ப்பமானார்.

இரண்டாவது கர்ப்பம்
இதனால் சீரியலில் இருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக தற்போது ரியா அந்த சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆல்யாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த குழந்தைக்கு Arsh என பெயரும் சூட்டியுள்ளார்கள். சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஆல்யாவுக்கு ஆண் குழந்தை
இந்த நிலையில் குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் கழித்து ராஜா ராணி 2 சீரியலுக்கு ஆல்யா வருவார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவரோ இனி என்னால் முடியவே முடியாது. சந்தியாவாக நடிக்க வரவே மாட்டேன் என தெள்ளத் தெளிவாக கூறிவிட்டாராம். இதனால் இனி சந்தியா கேரக்டரில் ரியாவே தொடருவார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications