பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு
சென்னை: தமிழ் சினிமாவில் சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணி பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. அந்த வரிசையில் 1994ஆம் ஆண்டு வெளியான "அமைதிப்படை" திரைப்படம் முக்கியமான ஒன்றாகும். அரசியல் நையாண்டி கலந்த இந்த படம், வெளிவந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், இன்று வரை பேசப்படும் கல்ட் படமாக மாறியுள்ளது. இந்த படம் ரீ ரிலீஸ் ஆகும் சமயத்தில் நடிகர் சத்யராஜ் பேசிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமைதிப்படை நடிகர்கள்
அமைதிப்படை படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், கஸ்தூரி, ரஞ்சிதா, மலேசியா வாசுதேவன், சுஜாதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா அமைத்த இசையும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. குறிப்பாக, சத்யராஜ் நடித்த நாகராஜ சோழன் எம்.எல்.ஏ கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அரசியல் படம்
அரசியல் அமைப்புகளையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் நேரடியாக சுட்டிக்காட்டிய இந்த படம், வெளியான காலத்தில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில், அதன் தைரியமான கதை சொல்லல் மற்றும் வசனங்கள் காரணமாக, அது ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் படமாக மாறியது. இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் இப்படத்தின் கருத்துக்கள் பொருந்தும் என பலரும் குறிப்பிடுகின்றனர்.
அமைதிப்படை ரீ ரிலீஸ்
இந்நிலையில், "அமைதிப்படை" திரைப்படம் தற்போது 4K தரத்திலும், டால்பி ஒலியிலும் மேம்படுத்தப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான ட்ரெய்லர் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் இந்த ரீ ரிலீஸை வெளியிடுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இப்படம் வெளியாக இருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. அரசியல் நையாண்டி மையமாக உள்ள இந்த படம், இன்றைய அரசியல் சூழலுடன் ஒப்பிடப்பட்டு மீண்டும் பேசப்படும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நடித்த படம்
இந்த ரீ ரிலீஸ் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், சத்யராஜ் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் சில கருத்துகளை பகிர்ந்தார். "கைலாசா என்ற ஒரு நாடு இருக்கிறதாம், அது உண்மையா பொய்யா என தெரியவில்லை. சிலர் அங்கே ரஞ்சிதா தான் பிரதமர் என்றும் கூறுகிறார்கள்" என்று அவர் தொடங்கி, படத்தில் இடம்பெறும் அரசியல் குறிப்புகளை சுட்டிக்காட்டி சிரிப்பூட்டும் வகையில் பேசினார். மேலும், "ஒரு பிரதமர் நடித்த படம் அமைதிப்படை தான் இருக்கலாம்" என்று கூறி நிகழ்ச்சியில் இருந்தவர்களை சிரிக்க வைத்தார்.
2013ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் அது முதல் பாகம் அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அதனால், ரசிகர்கள் மத்தியில் முதல் பாகம் இன்னும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. அதேபோல இந்த படத்தில் தனக்கு ரொம்ப பிடித்த காட்சி என்னவென்றால், நடிகை கஸ்தூரி குளத்தில் குளிக்கும் ஒரு காட்சி தான். அதற்கு சூம் வைத்த போது கஸ்தூரி ரொம்ப கவர்ச்சியாக இருந்தார் என்று மேடையில் கஸ்தூரி முன்பே சத்யராஜ் சர்ச்சையாக பேசி இருக்கிறார்.
மொத்தத்தில், "அமைதிப்படை" என்பது ஒரு சாதாரண படம் அல்ல. அரசியலை நையாண்டி செய்து, சமூக உண்மைகளை நேரடியாக கூறிய படைப்பாக அது இன்று வரை நிலைத்திருக்கிறது. தற்போது மீண்டும் திரையரங்கில் வெளியாக இருப்பதால், புதிய தலைமுறையும் இந்த படத்தின் தாக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது













Click it and Unblock the Notifications