அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்
சென்னை: தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த இயக்குனர் செல்வராகவன் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். அவர் அடிக்கடி தனது சோசியல் மீடியா பக்கங்களில் தத்துவம் கலந்த வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வரிசையில், இன்று வெளியிட்டுள்ள அவரது புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் அவர் கூறிய கருத்துகள் பலருக்கும் ஊக்கமாகவும் சிந்திக்க வைக்கும் வகையிலும் உள்ளன. குறிப்பாக அவர் பேசிய வீடியோ முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

செல்வராகவன் வீடியோ
செல்வராகவன் பேசுகையில்,"இந்த உலகத்துல உங்களை பத்தி எல்லாரும் சொல்லுற ஒப்பினியன் என்னென்ன உங்களுக்கு டேலண்ட் பத்தாது, உங்களால இத பண்ண முடியாது உங்களால.. இந்த உயரத்துக்கு பண்ண முடியாது உங்களால என்ன தான் கஷ்டப்பட்டாலும் இதை பண்ண முடியவே முடியாது என்று சொல்லுவாங்க. ஆபீஸ்க்கு போனாலும் அதே தான். வீட்டுக்கு போனாலும் அதேதான் சொல்லுவாங்க.
இந்த உலகத்துல சுத்தி சுத்தி எங்க போனாலும் உங்களைப் பத்தி எல்லாரும் சொல்லுற ஒப்பினியன் உங்களால முடியாது. இவங்க யாருக்கும் ஒப்பினியன் சொல்ற அளவுக்கு அருகதை கிடையாது. அவங்க கிட்டயே பத்தாயிரம் குறைகள் வச்சிக்கிட்டு உங்கள பத்தி ஒப்பினியன் சொல்றதுக்கு எப்படி முடியும்? ஆனால் நம்ம பண்ணுற மிஸ்டேக் என்னன்னா அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க... இவங்களே சொல்லிட்டாங்களே என்று அதையே நெனச்சிட்டு ஒரு நாளில் முகாம் வாசி நேரத்தை போக்கி விடுகிறோம்.
அப்புறம் எங்கிருந்து உங்களுடைய லட்சியத்தை அடைய முடியும்? ஒன்னும் பண்ண முடியாது. மனசு என்கிறது ரொம்ப தூய்மையான பிளேஸ். அங்க ரொம்ப நல்ல எண்ணங்களையும், நம்முடைய லட்சியங்களையும் பற்றி மட்டுமே யோசிச்சிட்டு இருந்தீங்கங்கனா ரொம்ப சீக்கிரமா உங்களுடைய இலட்சியத்தை அடைஞ்சிடலாம்.
ஆனா நீங்க அடுத்தவங்க சொல்றதை எல்லாம் யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா இருக்க வேண்டிய இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்" என்று செல்வராகவன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
ரசிகர்கள் கருத்து
இந்த வீடியோ மூலமாக மற்றவர்கள் கூறும் எதிர்மறை கருத்துகளால் பாதிக்கப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற செய்தியை அவர் வலியுறுத்தியுள்ளார். "மனசு தூய்மையாக இருந்தால், நல்ல எண்ணங்களுடன் இருந்தால் இலக்கு அடைய முடியும்" என்ற அவரது கருத்து பல இளைஞர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த வீடியோ வெளியாகும் சமயத்தில், இயக்குனர் செல்வராகவனைச் சுற்றி சில சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து, அவர் தனது இரண்டாவது மனைவியுடன் பிரிந்து விட்டதாகவும், விவாகரத்து செய்து விட்டதாகவும் சிலர் தகவல்கள் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையிலும், இந்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
செல்வராகவன் இயக்கம் தற்போதைய படங்கள்
மேலும், அவர் இயக்கிய படங்களான புதுப்பேட்டை மற்றும் 7G ரெயின்போ காலனி ஆகியவற்றின் தொடர்ச்சிகள் - "புதுப்பேட்டை 2", "7G ரெயின்போ காலனி 2" - குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அதனை வைத்து சிலர் அவரை விமர்சித்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த சூழலில் அவர் வெளியிட்டுள்ள இந்த தத்துவ வீடியோ, அந்த விமர்சனங்களுக்கு ஒரு மறைமுக பதிலா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
செல்வராகவன் யார்?
இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் முறைக்காக அறியப்பட்டவர். அவரது படங்களில் மனித மனதின் இருண்ட பக்கங்கள், காதலின் நுணுக்கங்கள், சமூகத்தின் சிக்கல்கள் ஆகியவை ஆழமாக பிரதிபலிக்கப்படுகின்றன. காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் அவரது படைப்பாற்றலுக்கு சான்றுகளாக உள்ளன. குறிப்பாக, தனுஷ் உடன் இணைந்து அவர் உருவாக்கிய படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
சமூக வலைதளங்களில் விமர்சனங்களும், பாராட்டுகளும் ஒன்றாக கலந்து வரும் இந்த நேரத்தில், செல்வராகவனின் இந்த வீடியோ பலருக்கும் ஒரு உந்துசக்தியாக மாறியுள்ளது. விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தன்னுடைய பாதையில் முன்னேற வேண்டும் என்ற அவரது செய்தி, தற்போதைய இளைஞர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும், சிந்திக்க வைக்கும் வகையிலும் உள்ளது.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை! -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!














Click it and Unblock the Notifications