"சேலை கட்டிய செம்பருத்தி".. அடடா அள்ளுதே.. ஏங்குதே ரசிகர்களின் மனது!
சென்னை : இழுத்து சொருகிய புடவையில் ஷபானாவை பார்த்ததும் சலசலத்து போன ரசிகர்களால் லைக்குகளை போடாமல் இருக்க முடியவில்லையாம்.
பவ்வியமாக வந்தாலும் அந்த க்யூட்னஸ்க்கு அளவில்லையே என ஏங்கும் ரசிகர்கள் விழி மூட மறந்து விட்டார்களாம். அப்படி ஒரு அம்சமான சேலைக்கட்டுடன் ஷபானா இன்ஸ்டாவை அலற வைத்துள்ளார்.
மாடர்ன் உடை தான் கவர்ச்சி என்று யார் சொன்னது!! எங்க தலைவியின் சேலை அழகுக்கு ஈடு இருக்குமா என ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளை கொளுத்தி விடுகின்றனர்.

ஏக்கம் கூட்டும் ஷபானா
வெட்கத்தால் முகம் சிவந்து நாணத்தால் தலை குனிந்தபடி ஷபானா வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் உருகிப்போன ரசிகர்களால் கமெண்ட்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் நிறைத்து வருகிறது. எப்படி எல்லாம் கவிதை பேச என்று காதலுக்கு தெரியாதோ அதே போலத்தான் இவருடைய அழகை எப்படி கவிதையில் புகழ்ந்து தள்ள என்று ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார்களாம். அந்த அளவிற்கு நாணத்தால் தலை குனிந்து ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி இருக்கிறார். சும்மாவே இவருடைய சீரியலை வெறியாக ரசிக்கும் ரசிகர்களால் இவருடைய இந்த மாதிரி போஸ்டுக்கு கமெண்ட் போடாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

கையில் அந்த மோதிரம்
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் என சொல்லுமளவிற்கு இவருடைய அழகுதான் பலருடைய கண்களுக்குள்ளே நிற்கிறதாம். இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் இதுதான் 'கல்யாண களையா'என்று சிலர் கலாய்க்கவும் தவறவில்லை. அடக்க ஒடுக்கமாக இவர் புடவையில் இருக்கும் போட்டோவில் அவருடைய கைகளில் தெரியும் அந்த மோதிரமும் பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே இவருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ஆரியனும் என்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது என்று செய்திகள் பரவி வரும் நிலையில் தற்போதைய போட்டோவில் அவருடைய கையில் அந்த மோதிரத்தை பார்த்து ரசிகர்கள் கன்ஃபார்ம் பண்ணி விட்டனர்.

எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்
'முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு', உங்களுடைய வாயாலேயே என்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது என்ற செய்தியைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நச்சரிக்கும் ரசிகர்கள் எப்போது கல்யாணம் என்று கேட்கவும் தவறவில்லை. இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி என்பது போல கல்யாண பேச்சு தான் பல கமெண்டுகளில் போய்க்கொண்டிருக்கிறது. சில ரசிகர்கள் எங்களிடம் நீங்கள் சொல்லவில்லையே என்று செல்லமாக கோபப்பட்டும் வருகின்றனர். உரிமையோடு அவர்கள் பேசும் வார்த்தைகளை பார்க்கும்போதுதான் தெரிகிறது ஷபானாவின் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கின்றனர் என்று.

சீரியலில் அதிகரிக்கும் ரசிகர்கள்
இந்த அளவிற்கு தன்னுடைய வீட்டில் ஒருவராக நினைத்துக் கொண்டிருக்கும் ஷபானாவின் திருமணத்திற்கு அவரை விடவும் அவருடைய ரசிகர் தான் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனாலும் செம்பருத்தி சீரியலை விட்டு மட்டும் சென்று விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்யவும் தவறவில்லை. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் வலம் வரவேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதனாலேயே திருமணத்தை தள்ளி போட்டாலும் தப்பில்லை என்று ஆதரவளிக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சப்போர்ட் கொடுக்கும் ரசிகர்கள்
சேலை கட்டி வந்த செம்பருத்தி பூவாக இவர் முகம் மலர்ந்து இருக்கும் அழகை பார்த்து பலர் சொக்கி போனாலும் செம்பருத்தி சீரியலில் தற்போதைய இவருடைய கெத்தான கேரக்டரை பார்த்து இப்பதான் சீரியல் நன்றாக சூடு பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். எப்போதுமே சாந்த சொரூபியாக இருக்கும் ஷபானா இந்த சீரியலில் தற்போதுதான் ஐஸ்வர்யாவை எதிர்த்து பேசியிருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அடி வாங்கிக்கொண்டும், தியாகம் செய்யும் மருமகள் எல்லாம் அந்தக் காலம் எதிர்த்து நில்லுங்கள் உங்களுக்கு நாங்கள் சப்போர்ட் கொடுக்கிறோம் என்று அவர் சீரியலில் நடிக்கிறார், என்பதையும் மறந்து அவருக்காக குரல் கொடுக்கும் ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது ஷபானாவுக்கே பெருமையாக தான் இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications