காதலிக்க நேரமில்லை நடிகைக்கு திருமணம்...காதலிக்க வயது தேவையில்லை என்று நிரூபித்து விட்டாரே
சென்னை: 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் சீரியலான காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகைக்கு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது.
காதலிப்பதற்கு வயது தேவையில்லை என்று தற்போது அவர் நிரூபித்து விட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
38 வயதில் திருமணம் முடிப்பது அவருடைய விருப்பம் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் பண்ணி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த நடிகை
சின்னத்திரையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலான காதலிக்க நேரமில்லை சீரியல், இப்ப வரைக்கும் பலரால் மறக்க முடியாத ஒரு சீரியலாகத்தான் இருந்து வருகிறது. இந்த சீரியலில் 'என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு....உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்' என்று காதல் செய்பவர்களின் மன ஒலியாக இந்த பாடல் இப்ப வரைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பலருடைய ரிங்டோன்களில் இந்தப்பாடல் இடம் பெற்று வருவது மறுக்க முடியாத ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.

சீரியல் ரசிகர்களை கவர்ந்த சந்திரா
காதலிக்க நேரமில்லை சீரியல் மட்டுமல்லாமல் சன் டிவியில் தேவயானி ஹீரோயினாக நடித்து பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான கோலங்கள் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் பல ரசிகர்களையும் ரசிக்க வைத்த நடிகைதான் சந்திரா லக்ஷ்மன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மனசெல்லாம் திரைப்படத்தில் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்த பிறகு இவருக்கு அவருடைய சொந்த மொழியான மலையாளத்தில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மனம் கவர்ந்த திருமணம்
வாழ்க்கையில் வேலை முக்கியம்தான் ஆனால் அதற்காக வாழ்க்கையை மிஸ் பண்ணக்கூடாது. திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று இவரிடம் எவ்வளவோ ரசிகர்கள் கூறி வந்த நிலையிலும் அதற்கான நேரம் வரும் போது அது தானாக நடக்கும் என்று இவர் அமைதியாகவே அனைத்து நிகழ்வுகளையும் கடந்து வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இவர் மலையாளத்தில் இவருடன் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகர் டோஷ் கிறிஸ்டியை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. ஆனால் சந்திரா அப்படி எல்லாம் இல்லை. இது வீட்டில் உள்ள பெற்றோர்கள் விருப்பப்படி அவர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் என்று கூறியிருக்கிறார்.

வாழ்த்தும் ரசிகர்கள்
இவரிடம் எப்போது திருமணம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்த ரசிகர்களுக்கு தன்னுடைய திருமணத்தை பற்றி இன்ஸ்டாகிராம் மூலமாக தகவல் கொடுத்திருந்தார். இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் இவருடைய கணவரின் வயது இவரைவிட நான்கு வயது குறைந்தவர் என்பதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனாலும் காதலுக்கு நேரமில்லை என்ற சீரியலில் நடித்த இவர் காதலுக்கு வயது தேவையில்லை என்பதை நிரூபித்து விட்டார் என்று பல காதலர்களான ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பலர் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டிருப்பதை தொடர்ந்து இவரும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி கூறி உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications