நடிகை திவ்யா கணவரோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் பிரபலமான சீரியல் நடிகை தானா? இப்படி எல்லாமா!!??
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா ஸ்ரீதர் தற்போது பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் அதில் பேசியிருக்கிறார்.
திவ்யாவுக்கும் அவருடைய கணவருக்கும் பிரச்சனைக்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் கதாநாயகி என்று கூறியிருக்கிறார்.

பரபரப்பு குற்றச்சாட்டு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்னாவ்வின் மனைவி திவ்யா ஸ்ரீதர் தற்போது தன்னுடைய கணவர் மீதும் அவரோடு நடிக்கும் நடிகர் மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதில் திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக தமிழ் சீரியலுக்கு வந்ததாகவும், அப்போது அவரோடு நடித்த அர்னாவ்வை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஐந்து வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

கண்டிஷன் திருமணம்
ஒரு சில மாதங்களுக்கு முன்பு அர்னாவ் மற்றும் திவ்யாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். திவ்யா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் முஸ்லிம் மதத்திற்கு மாறினால்தான் நம்முடைய திருமணம் நடக்கும் என்று கூறியதாகவும், அர்னாவ்வின் வார்த்தைக்காக திவ்யாவும் முஸ்லிம் மதத்திற்கு மாறி அருணவை திருமணம் செய்து இருக்கிறாராம். அதன் அதன் பிறகு கோவிலில் வைத்தும் திருமணம் செய்து இருக்கின்றனர்.இரண்டு மதத்தின் அடிப்படையில் இவர்கள் திருமணம் செய்திருந்தாலும் ரெஜிஸ்டர் செய்ததாகவும் கூறி இருக்கிறார்.

அளிக்கப்பட்ட புகைப்படங்கள்
vதிருமணத்திற்கு பிறகு புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா பதிவிட்டதும் அதை டெலிட் செய்ய சொல்லி அர்னாவ் கூறியிருந்தாராம். அதனால் தான் கடந்த மாதம் இவர் போஸ்ட் செய்த இரண்டு நாட்களில் அனைத்து போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டிருந்ததாம். அது மட்டும் அல்லாமல் இருவரும் விளம்பர ஷூட்டிங் காக அப்படி போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்த நிலையில் அதுவெல்லாம் அர்னாவ் சொல்லித்தான் தான் செய்ததாக திவ்யா கூறியிருக்கிறார்.

காரணம் இவர்தானாம்
திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திவ்யாவின் வாழ்க்கையில் அர்னாவ் செல்லமா சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகுதான் பிரச்சனை தொடங்கியிருந்ததாம். செல்லமா சீரியலில் ஒரு மாதம் நன்றாக போய்க் கொண்டிருந்ததாம். அதற்குப் பிறகு அந்த சீரியல் கதாநாயகியோடு அர்னாவ்க்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும், நெருங்கி பழகி வருவதாகவும் திவ்யாவிடம் பலரும் கூறியிருந்தார்களாம். ஆதலால் அதைப்பற்றி திவ்யா அர்னாவ்விடம் கேட்ட பிறகு தான் இவர்கள் இருவருக்கும் அதிகமாக சண்டை ஏற்பட்டதாம். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக திவ்யா ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் செல்லம்மா சீரியல் ஹீரோயினி அன்ஷிதா தான் காரணம் என்று திவ்யா கூறி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications