மகாலட்சுமி வெளியிட்ட உருக்கமான பதிவு... அட்வைஸ் கொடுக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் லைவ்வில் தன்னுடைய ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தனது திருமணத்தில் தன்னைப் பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கருத்துகள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மகாலட்சுமியால் தனது கணவரை பற்றி பாடி ஷேமிங் பண்ணுவதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

நெகட்டிவ் கருத்துகளை பேசுபவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் என்றும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் ரசிகர்கள் இவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

பிரபலமான ஜோடி

பிரபலமான ஜோடி

சமீபத்தில் திருமணம் முடிந்த சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமண செய்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. ரசிகர்களும் நெட்டிசன்களும் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் கூறி சமூக வலைத்தளத்தை அல்லப்படுத்தி வருகிறார்கள். இந்த அளவிற்கு தங்களுடைய திருமணம் பிரபலமாகும் என்று மகாலட்சுமி நினைக்கவே இல்லையாம். ஆனாலும் மகாலட்சுமியை பற்றி பல்வேறு வதந்திகள் நெகட்டிவ் கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை

தொகுப்பாளராக அறிமுகம் ஆகி சீரியல்களில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் மகாலட்சுமி சர்ச்சைகளுக்கு ரொம்பவே பிடித்துப் போனவர் போல. அதனால் தான் அடிக்கடி இவருடைய பெயர் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே திருமணம் முடிந்த அவருடைய கணவருக்கும் இவருக்கும் நடந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பலருக்கும் பொழுது போக்காக இருந்து வந்தது. அதற்கு பிறகு இவருடன் நடித்த சின்னத்திரை நடிகருக்கும் இவருக்கும் காதல் என்று அந்த நடிகரின் மனைவி போலீசில் கம்பளைண்ட் செய்து இவருடைய நடிப்பையை தாண்டியும் இவரை பிரபல பட வைத்து விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 உணர்வு பூர்வமான வார்த்தைகள்

உணர்வு பூர்வமான வார்த்தைகள்

தற்போது மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது பணத்திற்காகவே என்று பலர் கதை கட்டிக் கொண்டிருக்கும்போது, இன்ஸ்டாகிராம் லைவில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கும் நெகட்டிவ் கருத்துக்களை கூறும் நெகட்டிவ்வர்ஸ்களுக்கும் பதில் கூறியிருக்கின்றனர். அதில் மகாலட்சுமி யாரையுமே பாடி ஷேமிங் பண்ணாதீங்க, உங்க வீட்டிலையோ இருந்தாலும் சரி, சமூகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஒல்லியாக இருக்கிறார்கள், குண்டாக இருக்கிறார்கள் என்று அவர்களை நீங்கள் பாடி ஷேமிங் செய்யாதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அக்கா, அண்ணா, தங்கச்சி யாராக இருந்தாலும் நீங்கள் அப்படி செய்யும்போது அவர்களுக்கு என்ன மாதிரி இருக்குமோ அதே போல தான் எனக்கும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

மகாலட்சுமியின் பீலிங்

மகாலட்சுமியின் பீலிங்

அதுமட்டுமல்லாமல் மகாலெட்சுமி தன்னுடைய கணவரின் மீது இருக்கும் அன்பை வெளிக்காட்டும் விதமாக, நீங்கள் என்னை என்ன வேணாலும் சொல்லிக்கோங்க. ஆனால், என்னுடைய கணவரைப் பற்றி இனி பாடி ஷேமிங் பண்ணாதீங்க என்று உருக்கமாக கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமிக்கு கவலைப்படாதீங்க நெகட்டிவ் கருத்துக்களை கண்டுகொள்ளாமல் ரவீந்திரோடு சந்தோஷமாக வாழுங்கள் என்று அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் நெகட்டிவ் கருத்துக்களை பற்றி கண்டுகொள்ளாத நீங்கள் எதற்காக அதற்கு பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+