ஷபானா அவசர கல்யாணத்திற்கு இது தான் காரணமா? பெற்றோர் நேரில் வந்து வாழ்த்தாதது ஏன்?
சென்னை: சின்னத்திரையில் முக்கியமான இடத்தில் இருக்கும் ஷபானாவின் திருமணம் அவசர அவசரமாக நடந்தது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ரசிகர்கள் பலர் தங்களுடைய சந்தேகங்களை கமெண்டுகளாக சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர்.
ஆனாலும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பொழிந்து வருகிறார்கள்.

எளிமையான திருமணம்
ஜீ தமிழில் கதாநாயகியாக பலருக்கும் பரிச்சயமான செம்பருத்தி ஷபானா மற்றும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகனாக கலக்கி வரும் ஆரியன் இவர்கள் இருவரின் திருமணமும் எளிமையான முறையில் சென்னையில் நடந்துள்ளது. கொட்டும் மழையிலும் இவர்களது திருமணம் சிறப்பாக முடிந்து இருந்தாலும் ரசிகர்கள் ஷபானாவின் மீது சிறு வருத்தத்தில்தான் இருந்து வருகிறார்களாம். காரணம் திருமணத்தைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதுதானாம்.

எதற்கு இந்த அவசரம்??
ஷபானா திருமணம் எப்போது என்று எத்தனையோ ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாலும், இவர் பொறுமையாக கொஞ்ச நாள் போகட்டும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது திடீரென்று இவர் தன்னுடைய திருமணத்தை முடித்துவிட்டார். இது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய காதல் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர் இந்த மாதிரி அவசர அவசரமாக திருமணத்தை முடித்து விட்டாரா??என்று பலர் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

இப்படியும் சந்தேகமா
ஷபானா மற்றும் ஆரியன் இருவருமே புகழின் உச்சியில் இருக்கும் நிலையில் இவர்கள் தங்களது திருமணத்தை இவ்வளவு சஸ்பென்ஸாகவும், எளிமையாகவும் நடத்துவதற்கு காரணம் இவர்கள் இருவரும் வேறு வேறு மதமாக இருப்பதாலோ. .!!என்று இன்னொரு தரப்பினர் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். ஷபானா ஷாஜகான் ஒரு முஸ்லிம் பெண் என்பதாலும், அவர் இந்து பையனான ஆரியனை காதலித்ததால் அவர்கள் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் கிடைக்காததால் தான் இவர்கள் திருமணத்தை எளிமையாக முடித்து இருக்கிறார்களா??அதுவும் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றிருக்கிறது. அப்படி என்றால் ஷபானா மதம் மாறிவிட்டாரா?? என்று பலர் குழப்பமான சந்தேகங்களை சமூகவலைத்தளங்களில் கிளப்பி விடுகிறார்கள்.

நெட்டிசன்களின் கருத்து
ஏற்கனவே ஷபானாவின் திருமணத்தில் ஷபானாவின் பெற்றோர் உட்பட கலந்து கொள்ளவில்லை. ஆரியனின் தாய் தான் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார். அதனால் ஷபானாவின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதமில்லை என்று ஒரு சிலர் அடித்து கூறிவருகின்றனர். அதனால் தான் இனிதான் சென்னையின் மருமகளாக மாறி இருக்கப் போகிறேன் என்று ஷபானா கூறினாரோ..!!??என்று சந்தேகங்களை கிளப்பி பல நெட்டிசன்கள் கமெண்டுகளை பறக்கவிட்டு வருகிறார்கள். எப்படியோ ஷபானா தன் திருமணம் நல்லபடியாக முடிந்து இருந்தாலும், அதைப் பற்றி பேசி நெட்டிசன்கள் கமெண்டுகளை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications