தல தீபாவளியில் நெகிழ்ச்சியாய் புது மகிழ்ச்சியை பகிர்ந்த ஷபானா.. மூவராக தீபாவளி கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சின்னத்திரை நடிகை ஆன ஷபானா வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தல தீபாவளியில் தங்களுக்கு கிடைத்த புது உறவை பற்றி ஷபானா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

ஷபானா வெளியிட்ட பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

செம்பருத்தி பார்வதி

செம்பருத்தி பார்வதி

கேரளா நடிகையான ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலமாக தமிழ் சீரியலில் அறிமுகமானார். முதல் சீரியலின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் இவருடைய கேரக்டர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டது. முதல் சீரியலில் இவருடைய க்யூட்டான நடிப்பை பார்த்த ரசிகர்கள் இவர்தான் சின்னத்திரை இளவரசி என்றெல்லாம் இவருக்கு பட்டத்தை வழங்கி வந்தனர். செம்பருத்தி சீரியலில் இவர் பார்வதி ஆக நடித்து இப்ப வரைக்கும் ரசிகர்களின் மத்தியில் பார்வதியாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கேரளத்தை பூர்விகா கொண்ட ஷபானா தமிழகத்தை சேர்ந்த சின்னத்திரை நடிகனான ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். ஜீ தமிழ் நடிகர்களுக்கும் விஜய் டிவி நடிகருக்கும் காதல் என்ற செய்தி கடந்த வருடம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.

எளிமையான திருமணம்

எளிமையான திருமணம்

ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய திருமணத்திற்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லையாம். பின்பு ஆரியன் வீட்டில் சம்மதித்து விட்டார்களாம். ஆனால் ஷபானாவின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்ற செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவருடைய திருமணம் எளிமையாக முடிவடைந்தது. திருமணத்திற்கு பிறகு ஷபானா செம்பருத்தி சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது அந்த சீரியல் முடிவடைந்ததும் சன் டிவியில் புதிய சீரியலில் நடிப்பை இருப்பதாக கூறியிருக்கிறார். அதுபோல திரைப்படம் ஒன்றிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நெகிழ்ச்சியான மகிழ்ச்சி

நெகிழ்ச்சியான மகிழ்ச்சி

இந்த நிலையில் இந்த வருடம் இவர்கள் தல தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். இவர்களுடைய தல தீபாவளி கொண்டாட்டத்திற்கு இவர்கள் தனியாகத்தான் கொண்டாடுகிறார்கள் என்று பலரும் கூறி வந்திருப்பார்கள் போல, அதனால் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் நடிகர் எம் எஸ் பாஸ்கர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, "யாரு சொன்னாங்க? நாங்க தனியா தான் தல தீபாவளி கொன்றாடுகிறோம் என்று, எங்களுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி அப்பா எம் எஸ் பாஸ்கர்" என்று அவர்களை டேக் செய்து ஷபானா நன்றி கூறி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். ஷபானாவின் பதிவிற்கு யாரும் இல்லை என்று ஃபீல் பண்ண வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் என்று சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுபோல ரசிகர்களும் உங்களுக்காக ஆர்மி அமைத்து நாங்கள் இருக்கிறோம் என்று வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அனுப்பி வைக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+