இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை... தழுதழுத்த குரலில்..ஃபீல் பண்ண வைத்த ஸ்ருதிகா
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் அன்பை பார்த்து மிரண்டுபோன ஸ்ருத்திகா ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
Recommended Video
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை என்று ஸ்ருதிகா கூறியிருக்கிறார்.
ஸ்ருதிகா தன்னுடைய வாழ்க்கையில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மறக்க முடியாதது என்று கூறியிருக்கிறார்.

அழுகைக்கு மாற்றான நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களும் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகின்றனர். சின்னத்திரை சீரியல்களுக்கு மாற்றாக இந்த ரியாலிட்டி ஷோ இருப்பது ரசிகர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியாக இருந்து வருகிறது. சீரியல்களில் அழுகாச்சி சீன்களை பார்த்து பதறிப் போய் இருந்த ரசிகர்களுக்கு இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்று மருந்தாக இருந்து வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களும் அதிக அளவில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதற்காகவே பலர் இதில் கலந்து கொள்வதற்காக வாய்ப்பு தேடி அலைந்து வருகிறார்களாம். அந்தவகையில் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தன்னுடைய நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காததால் வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ருதிகா மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இவர் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருப்பது இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

வைரலாகும் வீடியோ
ஸ்ருதிகா முதல்முறையாக குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் அறிமுகமான அன்றே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் இவருடைய கேரக்டரை ரசிகர்கள் அதிகமாக ரசிக்க தொடங்கிவிட்டனர். அதனாலே முதல்நாளே இவருக்கு அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் தொடங்கிவிட்டனர். ரசிகர்களின் அன்பை பார்த்து மிரண்டுபோன ஸ்ருதிகா தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனக்கு இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை என்று ஸ்ருதிகா கூறியிருக்கிறார்.

ஸ்ருதிகாவின் நெகிழ்ச்சியான அன்பு
இதுவரைக்கும் இல்லாத வகையில் ரசிகர்கள் தனக்கு தரும் ஆதரவிற்கு அவர் உருக்கமாக நன்றி கூறியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக கடந்த மூன்று வாரமாக உங்களை மகிழ்விக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மூன்று வாரத்திற்கு உள்ளே எனக்கு இவ்ளோ அன்பு கொடுத்து சமூக வலைத்தளத்தில் வேற வேற நாடுகளிலிருந்தும் எனக்கு அவ்வளவு மெஸேஜ் மோட்டிவேஷன் ஆக லவ் சென்ட் பண்றீங்க. அதற்கு தேங்க்யூ சோ மச் அதுமட்டுமல்லாமல் நான் சொல்றத வச்சு என்னுடைய ஃபோட்டோஸ் வீடியோக்களையும் நீங்கள் எடிட் செய்து என்னையும் டேக் செய்து அனுப்பி வைப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால்தான் நான் அதையெல்லாம் ரிபோஸ்ட் செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஃபீல் பண்ண வைத்து விட்டாரே
ரசிகர்கள் எனக்காக அனுப்பும் மீம்ஸ்கள் எல்லாம் என்னை அவ்வளோ ஹேப்பி படுத்ததுது. அதற்கு எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ் நான் இவ்வளவு லவ் எக்ஸ்பர்ட் பண்ணவே இல்லை. இதுக்கு எல்லாம் நான் ஒர்த்தா என்று கூட எனக்கு தெரியவில்லை. ஏன்னா நான் அவ்வளவா ஒண்ணும் பண்ண வில்லை. எல்லாத்துக்கும் தேங்க்ஸ், ஆனாலும் தேங்க்ஸ் எல்லாம் ரொம்ப சின்ன வார்த்தைகள் அதனால நீங்க எல்லாரும் எப்போதும் ரொம்ப சந்தோஷமா ஹாப்பியா இருக்கணும். அதற்காக என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்கு ரசிகர்கள் பலர் தொடர்ந்து லைக் கொடுத்து வருகின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications