சீரியலில் நடந்த பிரச்சனையால் ராஜேஸ்வரி தற்கொலை! கோவிலுக்கு போயிட்டு வந்து தப்பான முடிவு, சித்தப்பா வேதனை
சென்னை : தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி நேற்று (டிசம்பர் 12ஆம் தேதி) தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் சின்னத்திரையில் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு காரணம் சீரியல் தரப்பில் ஏதோ பிரச்சனை நடந்ததுதான் என்று அவருடைய சித்தப்பா பேசியிருக்கிறார்.
சீரியல் நடிகை ராஜேஸ்வரி சென்னை பிராட்வே ராயப்பன் முதலி தெருவில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் உட்பட ஒரு சில சீரியல்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருந்திருந்தார். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.

மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் சித்தப்பா கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ராஜேஸ்வரியின் சித்தப்பா பேசும்போது ராஜேஸ்வரி ரொம்பவும் தைரியமான பொண்ணு. அவங்க தற்கொலை செஞ்சிட்டாங்க என்று சொல்வதை நம்பவே முடியல. நாளை ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 14ஆம் தேதி ராஜேஸ்வரியின் பொண்ணுக்கு சடங்கு பங்க்ஷன் வைத்திருந்தார். ஏற்கனவே இவங்க ஒரு வீட்டில் வசித்து வந்தாங்க. அந்த வீட்டிலிருந்து இப்போதுதான் அவர் பிறந்து வளர்ந்த இடமான பிராட்வே ராயப்பன் தெருவில் குடி போயிருந்தாங்க.
சில நாட்களுக்கு முன்புதான் முருகன் கோயிலுக்கு போயிட்டு வந்தாங்க. தீவிரமான முருக பக்தையான என் பொண்ணு முருகன் கோயிலில் வெள்ளியில் வேல் வாங்கி கொடுத்துட்டு வந்தாங்க. தன்னுடைய மகளுடைய சடங்கு பங்க்ஷனை பிரமாண்டமா நடத்தணும்னு ஆசையோடு இருந்தாங்க. ஆனா இப்ப இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்காங்க என்பது எங்க குடும்பத்துக்கே அதிர்ச்சியா இருக்கிறது.
குடும்பத்தில் பிரச்சனை என்று எல்லாரும் சொல்லுறாங்க ஆனால் பிரச்சனை இல்லாத குடும்பம் எங்க இருக்கு? ராஜேஸ்வரியின் கணவர் ஆரம்பத்தில் ரொம்ப குடிப்பாரு. அதற்குப் பிறகு ராஜேஸ்வரிதான் அவங்களை ஹாஸ்பிட்டலில் சேர்த்து குடியை மறக்க வைத்தாங்க. இப்போ அவர் நல்லாதான் இருக்கிறார். பிள்ளைங்க ரெண்டு பேரும் ரொம்ப தங்கமானவங்க. மூத்த பையன் இப்பதான் காலேஜ் முடிச்சுட்டு இருக்கான். பொண்ணு ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருக்குது. இந்த குழந்தைகளை விட்டுட்டு போக எப்படித்தான் மனசு வந்துச்சுன்னு தெரியல.
ராஜேஸ்வரி அவங்க அம்மா வீட்டுல இருக்கிறதா தான் எல்லாரும் சொல்லுறாங்க ஆனால் எங்களை பொருத்த வரையில் சூட்டிங் ஸ்பாட்டில் அல்லது என் பொண்ணு வேலை பார்த்த சீரியலில் எதோ பிரச்சனை, அதனால தான் அவங்க இப்படி ஒரு தப்பான முடிவு எடுத்து இருக்காங்க. இதுவரைக்கும் தைரியமா இருந்த பொண்ணு கடைசியில் எந்த பிரச்சினை என்று வெளியே சொல்லாமலே போய் சேர்ந்துட்டாங்க. இனி குழந்தைகள் நிலைமையை நினைச்சா தான் வருத்தமா இருக்கு என்று கண் கலங்கியபடி ராஜேஸ்வரியின் சித்தப்பா பேசியிருக்கிறார்.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications