சிறகடிக்க ஆசை: முத்துவால் வந்த வினை, அருண் அம்மாவை கொலை செய்த செல்வம்! முடிச்சு விட்டுட்டாங்க போங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி இரண்டாம் தேதிக்கான எபிசோடில், யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது செல்வம் அருணுடைய அம்மாவை கார் ஏற்றி கொலை செய்து இருக்கிறார். ஏற்கனவே முத்து மீது நீத்து ரெஸ்டாரண்டை எரித்துவிட்டார் என்ற ஒரு பழி இருக்கும் நிலையில் இப்போது இதை வைத்து பெரிய பிரச்சனை வெடிக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து, நீத்துவை ரவியுடன் இனி பழகக்கூடாது என்று மிரட்டிய அடுத்த நாளே, நீத்துவின் ரெஸ்டாரண்ட் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. இதற்குப் பின்னால் முத்து தான் இருக்கிறான் என நீத்து ரவியிடம் சொல்ல, ரவி கடுப்பாகி முத்துவிடம் வந்து சண்டை போடுகிறார். இதே நேரத்தில், ரெளடிகள் சிலர் நீத்துவின் காலையும் அடித்து உடைப்பதால், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நீத்துவை ரவி தான் கவனித்துக் கொள்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி ஒரு கஷ்டமருடன் வருகிறார். அவருக்கு ஓவன் வாங்கித் தருவதாக சொல்லி, ஜீவாவிடம் மாடல்கள் காட்டச் சொல்கிறார். அந்த நபர் ரோகிணியிடம் அளவுக்கு மீறி நெருக்கமாக பேசுகிறார். டீ குடிக்கும் போது கூட, ரோகிணியுடன் சேர்ந்து ஒரே கப்பில் குடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த மனோஜ் கடுப்பாகிறார்.
மனோஜை வெறுப்பேற்றும் விதமாக ரோகிணி அந்த நபரிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறார். பின்னர் மனோஜை கணக்குவழக்குப் பார்க்க அழைத்து, அந்த நபரை வேறு நாள் வரச் சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனால் உன் கூட என்னால வேலை பார்க்க முடியாது என்று மனோஜ் சொல்லி விடுகிறார்.
இதற்குப் பிறகு மீனா, ஸ்ருதியை பார்க்க அவங்க வீட்டுக்கு செல்கிறார். ஸ்ருதியின் அப்பா, "என் பொண்ணை இங்க அனுப்பிட்டு நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?" என்று கேட்க, மீனா "நாங்க ஸ்ருதியை அனுப்பல, அவங்க எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம்" என பதில் சொல்கிறார். ஸ்ருதியின் அம்மா, "என் பொண்ணு அங்க வர மாட்டா, மாப்பிள்ளை தான் இங்க வந்து ஸ்ருதியுடன் இருக்கணும்" என்று சொல்கிறார்.

அப்போதுதான், நீத்துவின் ரெஸ்டாரண்ட் எரிந்த விஷயம், அந்த பழி முத்து மீது விழுந்திருப்பது, ரவி தற்போது நீத்துவுடன் மருத்துவமனையில் இருப்பது ஆகியவற்றை மீனா சொல்லிவிடுகிறார். அதைக் கேட்டு ஸ்ருதி இனி நேத்து விஷயத்தில் அவர் சொல்றதை எல்லாம் நீண்ட ரவி நம்புவார் என் மேல தான் கோபப்படுவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக அங்கிருந்து கிளம்பும் மீனா, ஒரு கடையில் பூ கொடுக்கச் செல்லும் போது, ஒரு பெண்ணை கார் மோதி கீழே விழுந்ததாக கேள்விப்பட்டு பார்க்க செல்கிறார். அந்த பெண் வேற யாருமில்லை; மீனாவின் தங்கச்சி சீதாவின் மாமியார், அருணின் அம்மா தான். அவர் அடிபட்டு பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்து, முத்துவுக்கும் சீதாவுக்கும் தகவல் தெரிவிக்கிறார். பின்னர் அருணின் அம்மா உயிரிழந்துவிட்டதாக தெரிய வருகிறது.
அருணின் அம்மாவை மோதிய கார் ஓட்டி வந்தது முத்துவின் நண்பன் செல்வம் தான். முத்துவுடன் நீத்து ரெஸ்டாரன்ட் விஷயத்தில் சண்டை போட்டு கோபத்தில் சென்றபோது தான் விபத்து நடக்கிறது. சம்பவ இடத்திலேயே அருணின் அம்மா உயிரிழக்கிறார்.
பின்னர் அருண் வீட்டில் அவரது அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முத்து வரும்போது, வாசலிலேயே அருண் அவரை தடுத்து நிறுத்தி, "உன்னால தான் எல்லாமே" என்று சொல்ல, முத்து அதிர்ச்சியடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications