Siragadikka Aasai: முதல் நாள் ஷூட்டிங்கில்.. அதை மறக்கவே முடியாது! சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இப்போ குடும்ப ரசிகர்களிடையே ரொம்பவே ஹிட். அந்த சீரியலில மீனா கேரக்டரில் நடிச்சுக்கிட்டு இருக்குற கோமதி பிரியா (Siragadikka Aasai serial Gomathi Priya), நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய எளிமையான வாழ்க்கை கதையாலவும் இப்போ இணையத்தில் செம்ம வைரலாகி வர்றார்.
சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தான் முதல் நாள் ஷூட்டிங் வந்தபோது என்ன நடந்தது என்பது பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார், "எனக்கு சினிமாவோட எந்த தொடர்பும் கிடையாது. எந்த பின்புலமும் இல்லாம தான் இந்த துறைக்கு வந்தேன்". மதுரையை சேர்ந்த சாதாரண குடும்பத்தில பிறந்தவர் கோமதி பிரியா. அப்பா ஒரு ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஆனா பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த ஹோட்டலை மூட வேண்டிய சூழ்நிலை வந்ததாம்.

குடும்பத்தின் நிலைமை
அந்த சமயத்தில் தான் குடும்பத்தின் நிலைமை ரொம்ப கஷ்டமா இருந்ததுன்னும் அவர் சொல்லியிருந்தார். படிப்புக்காக சென்னைக்கு வந்தப்போ, வீட்டுச் சூழ்நிலையால் சும்மா படிக்க மட்டும் இல்லாமல், படிக்கிறதோட சேர்த்து பார்ட்டைம் வேலைக்கும் போனாராம். "அப்போ நான் நடிப்புக்காக வரல... வாழ்க்கைக்காக தான் ஓடிட்டு இருந்தேன்"னு அவர் சொன்னது பல இளைஞர்களுக்கு ரொம்பவே கனெக்ட் ஆகுற விஷயம்.
அந்த நேரத்தில் ஒரு ஃப்ரெண்ட் மூலமாக விஜய் டிவியில் நடந்த 'மிஸ்டர் அண்ட் மிஸஸ்' நிகழ்ச்சிக்கு மாடலாக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைச்சதாம். அங்க போன முதல் நாளே அவருக்கு ஒரு பெரிய ஆச்சரியம். ஹேர் ஸ்டைல், மேக்கப், நல்ல சாப்பாடு, மரியாதை - "என்ன கேட்டாலும் கிடைக்குற மாதிரி இருந்தது. அப்போ தான், 'இது நல்லா இருக்கு... நாமும் இந்த ஃபீல்ட்ல ட்ரை பண்ணலாமே'னு தோணிச்சு"னு அவர் சிரிச்சுக்கிட்டே சொல்லியிருந்தார்.
ஓவியா சீரியல்
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, விஜய் டிவியின் 'வேலைக்காரன்' சீரியலில் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அங்க தங்கச்சி கேரக்டரில் நடித்தார். அதுக்குப் பிறகு கலர்ஸ் தமிழில் 'ஓவியா' சீரியலில் நடிக்க ஆடிஷன் போனப்போ, 30க்கும் மேற்பட்ட பேர் போட்டியில இருந்தாங்களாம். "அப்போ கூட நடிப்பு என்னன்னு எனக்கு சரியா தெரியாது. ஆனா பத்தாம் வகுப்பு படிக்குற மாதிரி ஒரு பெண்ணு வேணும்னு என்னை செலக்ட் பண்ணினாங்க. அங்க இருந்து தான் நடிப்பு கற்றுக்க ஆரம்பிச்சேன்"னு அவர் சொன்னது, தன்னம்பிக்கையோட தொடங்கிய பயணத்தை காட்டுது.
இந்த எல்லா அனுபவங்களுக்குப் பிறகு தான், 'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலமாக கோமதி பிரியா வீடுதோறும் பேசப்படும் முகமாக மாறினார். மீனா கேரக்டரில் அவர் காட்டுற எமோஷன், சிம்பிளான நடிப்பு, குடும்பப் பெண்ணுக்கே உரிய ரியாக்ஷன் - இதெல்லாம் சேர்ந்து ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கு. "இப்போ தான் மக்கள் மனசுல எனக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கு"னு அவர் சொன்னதும் பலருக்கு பிடிச்சு போச்சு.

மதுரை பொண்ணு
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, தமிழில் மட்டும் இல்லாமல் மலையாள சீரியல்களிலும் கோமதி பிரியா நடிக்க ஆரம்பிச்சிருக்கார். தமிழ்ல கிடைச்ச வரவேற்பு மாதிரியே, கேரளாவுலயும் அவருக்கு ரசிகர்கள் உருவாகி வர்றாங்க. "மதுரையை சேர்ந்த பொண்ணு நான். ஆனா நிறைய பேர் 'நீங்க கேரளாவா?'ன்னு கேட்குறாங்க"னு அவர் சொல்லுறதுலயே, அவரோட லுக், பேசுற ஸ்டைல் எல்லாமே தனியா ஒரு அட்ட்ராக்ஷன் உருவாக்குதுனு தெரிஞ்சுக்கலாம்.
சின்ன வேலை, பார்ட்டைம் ஜாப், சீரியல் ஆடிஷன், சின்ன ரோல்கள் - இதெல்லாம் கடந்து, இன்று ஒரு லீட் கேரக்டரில் நடிக்கிற நிலைக்கு வந்திருக்குறது கோமதி பிரியாவோட உழைப்புக்கு கிடைச்ச சரியான அங்கீகாரம் தான். எந்த பின்புலமும் இல்லாமல், தன்னம்பிக்கையோட முன்னேறுற இளைஞர்களுக்கு அவர் ஒரு லைவ் எக்ஸாம்பிள்.
'சிறகடிக்க ஆசை' மீனா கேரக்டர் மூலம் மக்கள் மனசுல இடம் பிடிச்ச கோமதி பிரியா, வருங்காலத்தில் பெரிய வாய்ப்புகளும், முக்கியமான கதாபாத்திரங்களும் கிடைச்சு, இன்னும் பெரிய உயரம் எட்டுவார் என ரசிகர்கள் நம்பிக்கையோட எதிர்பார்த்து இருக்காங்க.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications