சிறகடிக்க ஆசை: சத்யாவுக்காக களத்தில் இறங்கிய முத்து.. மீனா கண்டுபிடித்த உண்மை.. சிந்தாமணிக்கு சரியான அடி
சென்னை: விஜய் டிவியின் ஹிட் தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது சத்யா - ரேகா காதல் விவகாரம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இன்றைய ஜூன் 11 தேதிக்கான எபிசோடில், பொய் புகாரில் சிக்கி போலீஸ் லாக்-அப்பில் தவித்த சத்யாவை காப்பாற்ற முத்து, மீனா மற்றும் மிஸ்ரா இணைந்து எடுத்த அதிரடி நடவடிக்கை ரசிகர்களை கைதட்ட வைத்துள்ளது.

சிந்தாமணியின் சூழ்ச்சியை உடைத்த மீனா
ரேகாவை சத்யா கடத்திவிட்டதாக கூறி போலீசில் புகார் அளித்திருந்தார் ரேகாவின் அப்பா. ஆனால் இது முழுக்க முழுக்க சிந்தாமணியின் திட்டம் என்பதை ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்த மீனா, நேரடியாக சிந்தாமணியின் கணவர் வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார்.
அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் சாதுர்யமாக பேசி தகவல்களை வாங்கிய மீனா, ரேகா வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். உடனடியாக முத்துவுக்கு போன் செய்து இந்த தகவலை தெரிவிக்கிறார்.
மிஸ்ராவின் மாஸ் என்ட்ரி
இதற்கிடையில் போலீஸ் ஸ்டேஷனில் சத்யா கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவுடன் அங்கு வந்த மிஸ்ரா, சத்யாவை அடிப்பதை நிறுத்தும்படி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறார்.
ஆனால் இன்ஸ்பெக்டர், "அதை சொல்ல நீங்க யார்?" என திமிராக கேட்க, அடுத்த நொடியே தன்னுடைய அடையாள அட்டையை காட்டி தான் வருமான வரித்துறை அதிகாரி என்பதை மிஸ்ரா சொல்கிறார்.
அதன்பிறகும் கோபமான மிஸ்ரா, "எவ்வளவு லஞ்சம் வாங்கிட்டு இந்த பொய் வழக்கில் சத்யாவை கைது பண்ணீங்க? இப்பவே அவனை விடலேன்னா நேராக கமிஷ்னரை சந்தித்து புகார் கொடுப்பேன்" என எச்சரிக்கை விடுக்கிறார்.
ஒரே போனில் மாறிய போலீஸ்
மிஸ்ராவின் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், உடனடியாக ரேகாவின் அப்பாவுக்கு போன் பண்ணி, "உங்க பொண்ணு வீட்டிலேயே இருக்கிற விஷயம் இவங்களுக்கு தெரிஞ்சிருச்சு. இப்போ பெரிய அதிகாரியை கூட்டிட்டு வந்திருக்காங்க. எனக்கு பிரச்சனை ஆகிடும்" என்று சொல்கிறார்.
பிறகு வேறு வழியில்லாமல் சத்யாவை விடுவிக்க முடிவு செய்கிறார் இன்ஸ்பெக்டர். கையெழுத்து வாங்கி சத்யாவை வெளியே அனுப்ப, வெளியே வந்தவுடன் அருணிடம் தனது கோபத்தை காட்டுகிறார் மீனா.
காதலை விட மறுக்கும் சத்யா
வீட்டிற்கு திரும்பிய சத்யாவை பார்த்து சந்திரா கதறி அழுகிறார். "இனிமேலாவது அந்தப் பெண்ணை மறந்துடு. நமக்கு இந்த பெரிய இடத்து சம்பந்தம் வேண்டாம்" என்று கெஞ்சுகிறார். ஆனால் சத்யாவோ, "நான் ரேகாவைத்தான் திருமணம் செய்துகொள்வேன்" என்று உறுதியாக நிற்கிறார்.
சீதா, மீனா இருவரும் அவரை மனம் மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் காதலில் உறுதியாக இருக்கும் சத்யா எதற்கும் செவிசாய்க்க மறுக்கிறார்.
முத்துவின் அதிரடி பேச்சு
இந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் முத்து, அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் பேசுகிறார். "நீங்க இப்படி எதிர்த்துக்கிட்டே இருந்தா அந்தப் பொண்ணு ஏதாவது விபரீத முடிவு எடுத்துடுவா. இவனும் உயிரை மாய்ச்சிக்குவான். அப்புறம் நிம்மதியா இருப்பீங்களா?" என்று கேட்கிறார்.
முத்துவின் வார்த்தைகள் மீனாவின் மனதை மாற்றுகின்றன. சத்யாவையும் ரேகாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் மீனா.

இன்னும் கொடூரமான பிளானில் சிந்தாமணி
மறுபுறம் தனது திட்டம் தோல்வியடைந்ததால் கடும் கோபத்தில் இருக்கும் சிந்தாமணி, ரேகாவை வேறு இடத்திற்கு மாற்றி மறைத்து வைக்க புதிய திட்டம் போடுகிறார். இதனால் ரேகாவின் வாழ்க்கை மீண்டும் ஆபத்தில் சிக்குமா? சத்யா - ரேகா காதல் வெற்றி பெறுமா? சிந்தாமணியின் அடுத்த சூழ்ச்சியை முத்து - மீனா முறியடிப்பார்களா? என்ற பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
அடுத்தடுத்த எபிசோட்களில் சத்யா - ரேகா காதல் கதையில் மிகப்பெரிய திருப்பம் காத்திருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!














Click it and Unblock the Notifications