Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial latest promo ) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவும் மீனாவும் விஜயாவிற்கு எதிரான ஆதாரத்தை கண்டுபிடிக்கின்றனர். இதனால் மீனா இனி விஜயா வீட்டுக்கு மீண்டும் போகப் போகிறார் என்று தெரிகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தது. ஏற்கனவே விஜயாவிற்கு மீனாவை சுத்தமாக பிடிக்காது. ஆனால் சிந்தாமணி பிளான்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு போலி சாமியார் விஜயாவின் வீட்டிற்குள் வந்து உங்க இரண்டாவது மருமகளால் தான் இந்த வீட்டிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது, இந்த பொண்ணு உங்க வீட்டில் இருந்தால் உங்க தாலிக்கு பிரச்சனை உங்க புருஷன் உயிருக்கு கண்டிப்பா பிரச்சனை வரும் என்று சொல்லியிருந்தார்.
சிறகடிக்க ஆசை சீரியல் கதை
இதை விஜயாவும் நம்பி விட்டார். ஆனால் இந்த போலி சாமியாருக்கு பின்னாடி சிந்தாமணி தான் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சிந்தாமணி தான் செய்த சதி வேலைகளை ரோகிணியிடம் சொல்லி இருந்தார். சூழ்நிலை எப்படி இருக்க, இந்த சாமியாரை பற்றிய ஆகா ஓகோ என்று சிலரை வைத்து பேச வைத்து சிந்தாமணி நாடகம் போட்டிருந்தார். இதையெல்லாம் உண்மை என நம்பி ஏமாந்த விஜயா மீனாவை வீட்டை விட்டு துரத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் முத்துவிற்கு கிடைத்த வேனுக்கு பூஜை போடுவதற்காக கோவிலுக்கு மொத்த குடும்பமும் வந்து இருந்தனர். அப்போது மீனா கோவிலுக்கு வரும் வழியில் ஒரு பெண் தலையில் மூடாக்கு போட்டபடி அவசர அவசரமாக ஓடிப்போனார். பிறகு மீனா கோவிலுக்குள் வந்த நேரத்தில் சீதா தன்னுடைய தாலியை அத்துவிட்டு யாரோ ஓட்டிட்டாங்க என்று சொல்லி இருந்தார்.
சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
இதனால் மீனாவிற்கு அந்த பெண் மீது சந்தேகம் வந்திருந்தது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான (Siragadikka Aasai serial Promo) ப்ரோமோவில் அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்க மீனா அந்த பெண்ணை துரத்தி ஓடுகிறார். அந்த பெண்ணை பிடித்து தாலியை பிடுங்கும்போது அவருடைய முகத்தை பார்த்து விடுகிறார். அப்போதுதான் இந்த பொண்ணுதானே அன்னைக்கு சாமியாராக வீட்டுக்கு வந்து பேசுனது என்ற உண்மைகளும் மீனாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் அந்த போலி சாமியார் மீனாவை தள்ளிவிட்டு விட்டுவிட்டு ஓடி விடுகிறார்.
பிறகு நடந்த விஷயத்தை பற்றி மீனா முத்துவிடம் வந்து சொல்ல அதற்கு விஜயா அந்த பெண் சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க, இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல நீங்க உண்மையை நிரூபிங்க என்று சொன்னதும் முத்துவும், மீனாவும் அந்த போலி சாமியாரை தேடி அலைகின்றனர். அப்போது அங்கிருந்த சிசிடிவியில் அந்த போலி சாமியார் முகம் தெரிகிறது.
இதை வைத்து அந்த போலி சாமியாரை பிடித்து உண்மையை நிரூபித்ததும் மீனா அடுத்த வாரம் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் மீனாவும் முத்துவும் தனி குடித்தனம் போய் வேலை செய்து அவர்கள் குடும்பத்தையே ஒழுங்காக கவனிக்கலாம்.. அதை விட்டுட்டு இந்த விஜயா வீட்டுக்கு வந்து மீனா அடிமையாக வேலை செஞ்சாலும் அங்க மரியாதையே கிடைக்கப்போவதில்லை. அவர்களுக்கு அங்கீகாரமும் கிடைக்கப்போவதில்லை என்று பலரும் கமெண்ட்ஸ்களில் நொந்து கருத்து தெரிவிக்கின்றனர்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதி எடுத்த முடிவால் கலங்கி நிற்கும் குடும்பம்.. பாண்டியனுக்கு பெரிய தண்டனை! இது தேவைதான் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications