வீட்டை விட்டு கிளம்பிய ஜனனி.. வீட்டிற்குள் வரும் புது நபர்.. குணசேகரனுக்கு இனி திண்டாட்டம் தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
தீபாவளி சீர் செய்வதற்காக வந்த ஜனனியின் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது.
ஜனனியை காணாமல் அனைவரும் தேடிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள்ளே வரும் நபரால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வீட்டை விட்டு கிளம்பிய ஜனனி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் கேரக்டரை பற்றி சக்தி தவறாக பேசுவதால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜனனி திட்டி விடுகிறார். சக்திக்கு சப்போட்டாக குணசேகரன் அதட்டுவதால்,ஜனனி குணசேகரனை நான் சக்திக்கு மனைவியா? உங்களுக்கு மனைவியா என்று கேட்டு திட்டி விடுகிறார். இதனால் கதிர் ஜனனியை கன்னத்தில் அடித்து விடுகிறார். இதனால் இனி நான் உனக்கு மனைவியும் இல்லை, உன் வீட்டிற்கு மருமகளும் இல்லை என்று வீட்டை விட்டு கிளம்பி சென்று விட்டார். ஜனனி சென்றது தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் ஜனனிக்கு தீபாவளி சீர் செய்வதற்காக வந்திருந்தனர்.

குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி
ஜனனியின் அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் குணசேகரனும் சக்தியும் ஜனனியை பற்றி தவறாக பேசுகின்றனர். இதனால் ஜனனியின் அம்மாவும் அனைவரையும் திட்டிவிட்டு சென்றிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஜனனி மட்டும் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை, ஜனனிக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் உங்கள் யாரையும் விடமாட்டேன் என்று சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் ஜனனி வீட்டை விட்டு கிளம்பியதால் வீட்டில் இருக்கும் மற்ற மருமகள்கள் அனைவரும் வாசற்படியில் உட்கார்ந்து ஜனனி எங்கே சென்று இருப்பார் என்று புலம்பி கொண்டிருக்கின்றனர்.

வந்தாள் சூப்பராக இருக்கும்
ஜனனி வீட்டை விட்டு வெளியேறியதை பற்றி ஜனனியின் அண்ணன், வாசுவுக்கு போன் செய்து பேசுகிறார் .அடுத்ததாக குணசேகரன் வீட்டில் காம்பவுண்ட் கதவு திறக்கப்படுகிறது. இதோடு இன்றைய ப்ரமோ முடிவடைந்து இருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அடுத்ததாக வீட்டிற்குள்ளே யார் வரப் போகிறார்கள் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜனனியின் தோழியான வாசு தான் உள்ளே வரவேண்டும், வீட்டிற்குள்ளே வந்து குணசேகரனை மற்றும் சக்தியையும் நல்லா நாக்கப்பிடுங்கிக்குற மாதிரி நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வீட்டிற்கு வருபவர்
இல்லை என்றால் கௌதமோடு சேர்த்து வைத்து தான் சக்தி ஜனனியை பேசி இருப்பதால், கௌதம் வந்து சக்திக்கு நாலு போட்டு அவருடைய அண்ணனுக்கும் இரண்டு செவிலில் விட வேண்டும். அப்படி இருந்தால்தான் இன்றைய எபிசோடு தீ பறக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் ஜனனி தான் மீண்டும் வீட்டிற்குள் வரப் போகிறார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இறுதியாக வாசு தான் ஜனனியின் வீட்டிற்குள் வரப்போகிறாராம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications