பிறந்தநாளில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறிய கயல் சீரியல் நடிகை.. இதை மறைத்து நடித்திருக்கிறாரே!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தேவி கேரக்டரில் நடிக்கும் அபிநயா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை அபிநயாவின் கணவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார்.
சீரியலில் நடிக்கும் போது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை மறைத்து இவர் நடித்து வந்ததால் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறது.

கயலின் தங்கை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம்தான். இந்த சீரியலின் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவருடைய தங்கையாக நடிகை அபிநயா நடித்து வருகிறார். சீரியலில் அபிநயாவுக்காக கயல் படும் கஷ்டங்கள் ஏராளம். அதனால் ரசிகர்கள் மத்தியில் கயலுக்கு அனுதாபங்கள் கூடிக் கொண்டிருக்கிறது.

கணவர் வெளியிட்ட ரகசியம்
அபிநயா முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் கர்ப்பமாக இருப்பதால் அதை மறைத்துக் கொண்டுதான் சீரியலில் நடித்து வருகிறார். தற்போது வரைக்கும் இவர் சீரியலில் தொடர்ந்து வருகிறார். தன்னுடைய டெலிவரிக்கு பிறகு எப்படி என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் அபிநயாவை டேக் செய்து கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகர்
அபிநயாவின் கணவரும் சீரியல் நடிகர் தான். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் ஜீவா, கார்த்திக் இன் தம்பியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தங்களுடைய வாழ்க்கையில் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்ட நேரத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பொங்கும் தாய்மை மகிழ்ச்சி
தீபக் தன்னுடைய நெகிழ்ச்சியான மகிழ்ச்சியை புகைப்படங்கள் வெளியிட்டு அதற்கு, நீண்ட காத்திருப்பு முடிந்து விட்டது. 10 சிறிய விரல்கள், பத்து குட்டி விரல்கள் அன்பு மற்றும் கருணையுடன் எங்கள் குடும்பம் வளர்கிறது. இந்த விலைமதிப்பற்ற ஆன்மா மிகவும் இனிமையானது மற்றும் புதியது. இந்த சிறிய வாழ்க்கை ஒரு கனவு நனவாகும். உங்கள் அனைவரின் அன்பும் ஆசிர்வாதமும் வேண்டும். இந்த பதிவு எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது மற்றும் உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார். தன்னுடைய மனைவியின் பிறந்த நாளில் புதியதாக ஒரு உயிர் வரப்போகிற சந்தோஷத்தில் இருக்கும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications