என்னதான் சீரியல் என்றாலும் நியாயம் வேண்டாமா?? டாப் சீரியலில் சொதப்பல்கள்...காண்டான ரசிகர்கள்
சென்னை:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடந்த கொடுமைகள் தான் தற்போது நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா? ?என்று சீரியலில் நடிக்கும் நிஜ டாக்டரிடம் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நெட்டிசன்களிடம் மாட்டிய ரோஜா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பல நேரங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வீட்டுக்கு வீடு டிவிகள் வர தொடங்கிய நாட்களிலிருந்து சீரியல்கள் ரசிகர்களின் மனதை ஆக்ரமித்துக் கொண்டது. நாளுக்கு நாள் புதிதாக பல சீரியல்கள் அறிமுகமாகி கொண்டு வந்தாலும். ஒரு சில சீரியல்கள் பல வருடங்களாக முடிக்கப்படாமல் தான் ஜவ்வு போல இழுத்துக் கொண்டிருக்கும். சீரியல்களில் கதை இருக்கிறதோ இல்லையோ அதை பலவருடங்களாக கொண்டு போய் விடுவது பல சீரியல் குழுவின் வேலையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெட்டிசன்கள் இடம் வசமாக மாட்டி இருப்பது ரோஜா சீரியல் தான்.

விடை தெரியாத போராட்டம்
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பேவரைட். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை என்று சொல்லும் அளவிற்கு பல பெண்கள் இந்த சீரியலுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். அந்த வகையில் வீட்டு பெண்கள் பலரையும் கவர்ந்திழுக்கும் ஒரு சீரியல் ரோஜா சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி இருந்தாலும் இதில் இருக்கும் கதை என்னவோ ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. சீரியல் ஹீரோயினி ஹீரோவின் அத்தை மகள் தான் என்பதை நிரூபிப்பதற்காக பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியும் ஒரு கதையா
ரோஜா கேரக்டரில் நடித்து வரும் பிரியங்கா நல்கரி தமிழ் தெரியாமல் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து, தற்போது தமிழை நன்றாக புரிந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் தூய தமிழில் பேசியும் வருகிறார். ஆனால் சீரியலில் இன்னும் ரோஜாதான் அர்ஜூனின் அத்தை மகள், செண்பகத்தின் சொந்த மகள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருகிறது. அதுவும் அவருக்கு வில்லியாக இருக்கும் அனு செய்யும் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தாலும் அவரை வீட்டைவிட்டு அனுப்பாமல் இருந்துவரும் புத்திசாலித்தனம் சீரியல் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், நெட்டிசன்கள் அதைப் அங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கலாய்க்கும் காட்சிகள்
சீரியலில் தங்கள் குடும்பத்தின் உண்மையான வாரிசு யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அன்னபூரணி குடும்பத்தினரும் உள்ளனர். அதற்கு செண்பகமும், ரோஜாவும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக காரில் கிளம்பி போகிறார்கள். டிஎன்ஏ டெஸ்ட் எழுத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அனு பல திட்டங்களை போடுகிறார். அதை எப்போதும் போல அர்ஜூன் முறியத்துக் கொண்டு இருக்கிறார். அதனால் விரக்தியான அனு, ரோஜாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை ஏற்கனவே தெரிந்துகொண்ட ரோஜாவும் அர்ஜுனும் அதற்காக வேறு ஒரு பெண்ணுடைய முகத்தில் ரோஜா முகத்தை மாற்றுவார்கள். அதுவும் நடுரோட்டில் இவர்கள் செய்த காட்சி பலரையும் வியக்க வைத்திருந்தது. அருகிலிருக்கும் செண்பகம் ஆக இருக்கும் ஷாமிலி நிஜத்தில் ஒரு டாக்டர் அவர் நடிக்கும் இந்த சீரியலில் இப்படி ஒரு காட்சியா?? அதுவும் பலருக்கும் உபதேசம் செய்து பகுத்தறிவு பேசுபவர் இப்படி ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்...!!! என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications