எம்ஜிஆர், நம்பியார் காலத்து மரு டெக்னிக்கே தோத்துப்போச்சு...ஒரே மாஸ்க்கால் உருமாற்றம்.. எல்லை மீறிய ரோஜா
சென்னை: ரோஜா சீரியலில் நடந்த முக மாற்றத்தை பார்த்து தான் தற்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
என்னதான் பட்ஜெட் பிராப்ளமாக இருந்தாலும் இப்படியா நடுரோட்டில் அறுவைசிகிச்சை இல்லாமலேயே முக மாற்றம் செய்து விடுவார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இல்லத்தரசிகளை கவர்ந்த ரோஜா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்தருக்கிறது. வீட்டு பெண்மணிகளின் பேராதரவோடு இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணியில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்ப வரைக்கும் பல வீடுகளில் ஒன்பது மணிக்கு மேலே தான் சாப்பாடு கிடைக்கின்றதாம். காரணம் அதற்கு இந்த சீரியல் தான் என்று ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களை இந்த சீரியல் கவர்ந்துள்ளது காரணம் இதில் பஞ்சமில்லாத ரொமான்ஸ் மற்றும் விறுவிறுப்பான, திரைக்கதை தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய சீரியல்
இந்த சீரியலில் பிரியங்க நல்கரி ரோஜாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிபு சூரியனும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் டப் கொடுக்கும் வகையில் வில்லி கேரக்டரில் அக்ஷயா நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்பாக ஷாமிலி இந்த வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு இதில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் காரணம் தான். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வந்துகொண்டிருக்கிறது.

முடிவில்லாத டிஎன்ஏ டெஸ்ட்
அனு, ரோஜாவின் அடையாளத்தை திருடி தான் தான் இந்த வீட்டின் மகள் என்று நிரூபித்துக் கொள்வதற்காக போராடி வருகிறாள். இந்நிலையில் இந்த வீட்டின் உண்மையான வாரிசு யார் என்று நிரூபிப்பதற்காக ரோஜா பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதனை அனு ஒவ்வொரு முறையும் தடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது குடும்பத்தில் அனைவரின் ஒத்துழைப்போடு டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக செண்பகமும், ரோஜாவும் காரில் கிளம்பி போகிறார்கள். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து அணு பல திட்டங்களை போடுகிறார். அதை எல்லாம் முறியடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அர்ஜுனுடன் சந்திரகாந்தா, அனுவின்
போன் உரையாடல்களை கவனித்துக் கொண்டு இருந்துள்ளார்.

அனுவின் கொலை முயற்சி
அப்போது அணு சாக்ஸி இடம் ரோஜாவை கொள்வதற்காக துப்பாக்கி வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதைப் புரிந்துகொண்டு அர்ஜுன் ரோஜாவை கொலை செய்ய விடாமல் தடுப்பதற்காக ரோஜா இறந்தது போன்று நடிக்க வேண்டுமென்று ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதற்கு துணையாக சந்திரகாந்தா உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். அதில் ஏற்கனவே இறந்து போன ஒரு பெண்ணின் உடலை ரோஜாவை போலவே புடவை அணியப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அர்ஜுன் கொடுத்த டம்மி துப்பாக்கியால் அனு ரோஜாவை சுட்டதும் ரோஜா இறந்து போனது போல நடித்து வருகிறார். அடுத்தது தான் பெரிய ட்விஸ்ட் கிடைத்திருக்கிறது.

நடுரோட்டில் முகமாற்று வித்தை
ரோஜாவை துப்பாக்கியால் சுட்டதும் சரியாக அங்கே போலீஸ் வந்து அனுவை அரெஸ்ட் செய்து கூட்டி சென்று விடுகிறது. அதற்குப் பிறகு அர்ஜுன் வந்து ரோஜா நாடகத்தை முடித்துக் கொள்ள சொன்னதும் ரோஜா உடனே எழுந்து விடுகிறார். அதற்கு பிறகு ஏற்கனவே இறந்து போன பெண்ணின் உடல் அங்கே கொண்டு வரப்பட்டு அதற்கு வக்கீல் ஆக இருக்கும் பூஜா ஒரு மாஸ்க் அணிவித்து இருக்கிறார். அந்த மாஸ்க்கை முகத்தில் தடவி அப்படி இப்படி என்று ஏதோ மேஜிக் செய்து கொண்டிருப்பது போல காட்டி கடைசியில் அந்த பெண்ணின் உருவம் ரோஜாவை போன்று மாறிவிடுகிறது. அதைப் பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் திகைத்துப் போய் விட்டனர். நடுரோட்டில் இப்படி ஒரு முகமாற்று வித்தையா??என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

நெட்டிசன்களை மிரட்டிய ரோஜா சீன்
இந்த சீனை பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப் போய் விட்டனர். அடடா எம்ஜிஆர் காலத்தில் மரு வைத்து இருந்தால் மாறுவேஷம் என்று சொன்னதை நம்பினோம். ஆனால் இந்த மார்டன் காலத்தில் மாஸ்க் வைத்து நடுரோட்டில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து விடுகிறார்கள் என்று பலர் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த டெக்னிக் தெரியாமல் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் மணிக்கணக்கில் மேக்கப் போட்டு உருவ மாற்றம் அடைந்து இருக்கிறார். என்று கலாய்த்து வருகிறார்கள். தற்போது சமூக வலைத்தளத்தில் ரோஜா சீரியலுக்கு விதவிதமாக ட்ரோல், மீம்ஸ்கள் பறந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications