தயவு செய்து யாரிடமும் அப்படியெல்லாம் பேசாதீர்கள்... உருக்கமாக பதிவிட்ட சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ராஜ லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

பொதுவாக யாராக இருந்தாலும் அடுத்தவர்களிடம் நெகட்டிவ் கருத்துக்களை பேசக்கூடாது அதுவே ஒரு சில பாசிட்டிவ் கருத்துகளை பேசினால் எவ்வளவு நல்லது என்று ராஜலட்சுமி ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

மக்கள் இசைப் பாடகர்கள்

மக்கள் இசைப் பாடகர்கள்

மக்கள் இசை பாடகர்களாக விஜய் டிவியில் அறிமுகமாகி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஜோடி தற்போது பல திரைப்படங்களின் பின்னணி பாடகர்கள் ஆக கலக்கி வருகிறார்கள். இவர்களுடைய இருவரின் குரல்களும் தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒலிக்கும் பாடல்களில் கேட்டு வருகிறது. இவர்களுடைய ஹிட்டான பாடல்கள் பலருடைய சோகங்களை மறந்து போக வைக்கிறது. இதனால் இவர்களுக்கு தற்போது சமூகத்தில் அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது.

அதிகரிக்கும் நெகட்டிவ் கமெண்டுகள்

அதிகரிக்கும் நெகட்டிவ் கமெண்டுகள்

ஆரம்பத்தில் கடை கோடியில் இருந்தவர்கள் முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கியதும் ஏராளமான கருத்துக்கள் வருவது போலத்தான் இவர்களுக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இவர்கள் ஆக்டிவாக இருந்து வருவதால் பல்வேறு கருத்துகளையும் இவர்கள் சந்தித்து தான் வருகின்றனர். ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்தாலும், ஒரு சில நெட்டிசன்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு அதிகமாக கலாய்த்து வருகின்றனர். எப்போதுமே தங்களுடைய ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தில் கவனமாக இருந்து வருகின்றனர்.

இதுவும் நல்ல ஐடியா தான்

இதுவும் நல்ல ஐடியா தான்

சமீபத்தில் தான் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர் தங்களுடைய வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்து ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ராஜலட்சுமி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். யாராக இருந்தாலும் பார்த்தவுடன் அவர்களிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை சுட்டிக்காட்டாமல் நிறைகளை மட்டும் கூறினால் கேட்பவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும் என்பதை ராஜலட்சுமி சொன்ன விதத்தை வைத்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாசிட்டிவ் கருத்து

பாசிட்டிவ் கருத்து

ஒருவரை பார்த்தவுடன் நீ ஏன் இளைத்துப் போய்விட்டாய்? ஏன் கருப்பாகிவிட்டாய்? இது உனக்கு நல்லாவே இல்லை.. என்றெல்லாம் நெகட்டிவ்வான விஷயங்களை சொல்லாமல் அவர்களை ஒரு நிமிடம் கவனித்து அவர்களிடம் இருக்கும் ஒரு சில நல்ல விஷயங்களை மட்டும் நோட் பண்ணி, இந்த தோடு உங்களுக்கு அழகாக இருக்கிறது. நீங்க ஹேர் ஸ்டைல் செய்து இருக்கிறது அழகாக இருக்கிறது. என்று சொல்லிப் பாருங்கள் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். சொல்பவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்தல் ரசிகர்கள் பலர் எத்தனையோ பேர் உங்களுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் உங்களைப் பற்றி நெகட்டிவாக பேசிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இந்த மாதிரி பாசிட்டிவ் கருத்து தெரிவிப்பது நன்றாக இருக்கிறது என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+