‘பயங்கரமா உன் மீது கோபத்தில் இருக்கிறேன் போ’ ...சுருதியை அதட்டிய தாமரை
சென்னை: இன்றைய ப்ரோமோக்கள் எல்லாமே அழுகாச்சி சீன்களாக இருந்து ரசிகர்களை காண்டாக்கி வருகிறது.
வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா என்று தாமரைச் செல்வியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
விளையாட்டு என்றால் அனைவருக்கும் ஒன்றுதான் அதில் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று ரசிகர்கள் தாமரைக்கு அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.

வைரலான ப்ரமோ
பிக்பாஸ் ஒவ்வொரு டாஸ்க் வைக்கும் போதும் போட்டியாளர்களுக்கும் பிரச்சனைகளை எப்படி கிளப்பலாம் என்று தான் யோசித்து யோசித்து செயல்படுவர் போல. தற்போது கூட காயின்ஸ் வைத்து இரண்டு வாரமாக அதை இழுத்துக்கொண்டு இருந்தாலும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. என்ன தான் இதற்கு முன்பு ப்ரமோ வந்திருந்தாலும் இந்த அளவில் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யவில்லை. ஆனால் இன்றைய ப்ரமோ வேற லெவல் வைரலாகி வருகிறது.

தாமரைச் செல்வியின் கோவம்
சண்டை சச்சரவுகள் அதிகம் இல்லாத ஐந்தாவது சீசனாக இருந்து வந்த நிலையில் தற்போது நீங்கள் நினைத்ததெல்லாம் தவறு நாங்கள் வேறு மாதிரி என்று போட்டியாளர்கள் நிரூபித்து விட்டார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படியெல்லாம் கூட சண்டை போடுவார்களா?? அதுவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கண்டமேனிக்கு வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் தாமரைச்செல்வி.

சுருதிக்கு பெருகும் ஆதரவு
இதுவரைக்கும் வெகுளித்தனமான கேரக்டர் என்று தாமரைச்செல்வியை ரசித்து நினைத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் இவர் எமோஷனலாக பேசும் வார்த்தைகளை பார்த்து அவர் மீது காண்டில் இருக்கின்றனர். அதுவும் இவருக்காக பலபேர் விளையாடி தான் அந்த காயினை அவரிடம் கொண்டு சேர்த்து இருந்தார்கள். ஆனால் அதை பத்திரமாக வைத்து இருக்காமல் விட்டுவிட்டு, இப்படி அதை எடுத்து விட்டார் என்பதற்காக இப்படி எல்லாம் சுருதியை பேசலாமா என சுருதிக்கு ஆதரவாக பல ரசிகர்கள் கருத்துக்களை அனுப்பி வருகின்றனர்.

சிந்தும் கண்ணீர்
வயதிலும் அனுபவத்திலும் பெரியவராக இருக்கும் தாமரைச்செல்வி தற்போது பாப்பா என்று அனைவரையும் செல்லமாக அழைத்து கொண்டிருந்த இவர் இன்று கோபத்தை காட்டி இருக்கிறார். இதைப் பார்த்ததும் இதில் யார் மீது தப்பு என்று தெரியவில்லை. ஆனால் இந்த மாதிரி பெரிய வார்த்தைகளை பேசக்கூடாது என்பது மட்டும் பலருடைய வாதமாக இருந்து வருகிறது. ஒரு டாஸ்க்கில் ஜெயிப்பதற்காக விளையாடின விளையாட்டில் இப்படி கண்ணீர் சிந்தும் அளவுக்கு விளையாட்டு மாறிவிட்டது என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

அவ்வளவு கோபமா??
தாமரைச்செல்வி தான் வைத்திருந்த காயினை வெளியே வைத்துவிட்டு குளிக்க சென்றிருந்த நேரத்தில் அதை சுருதி எடுத்துவிட்டார். சுருதி அதை தன்னுடையதாக மாற்றி பிக்பாஸ் கேமராவின் காட்டிவிட்டார். இதனை தெரிந்துகொண்ட தாமரை, தனக்கு துரோகம் செய்துவிட்டதாக சுருதி மீது குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நியாயத்தை எடுத்துக் கூறலாம் என்று சுருதி அவரிடம் போராடிக் கொண்டிருக்கும்போது "பயங்கரமா உன் மீது கோபத்தில் இருக்கிறேன் போ பாப்பா" என்று பேசியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். என்னதான் நடக்குது பாஸ் வீட்டுக்குள் என்று பலர் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications